இப்பவாவது சொன்னாரே! நான் ஏன் அதை ரிஜெக்ட் பண்ணினேன்னா..? நடிகை அமலா பால் சொல்ற காரணத்தைப் பாருங்க!

By

சென்னை: அந்த புகழ்பெற்ற இயக்குனர் படத்தில் இருந்து விலகியது என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால்.

ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

இதையடுத்து மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் நடிகர் பிருத்விராஜுடன் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ் காரணம்

தனுஷ் காரணம்

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகை அமலா பாலும் ஏ.எல்.விஜய்யும் பிரிவதற்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று இயக்குனர் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை அமலா பால் மறுத்திருந்தார்.

திருமண போட்டோ

திருமண போட்டோ

இந்நிலையில், நடிகை அமலா பாலும் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. திருமணப் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார், பவ்னிந்தர் சிங். அதனுடன் 'Wedding Throwback' என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவின.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார் சிங். இது பரபரப்பானது. இதுபற்றி நடிகை அமலாபால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென விலகினார்.

தேவையற்ற விமர்சனம்

தேவையற்ற விமர்சனம்

விலகலுக்கான காரணத்தை இப்போது தெரிவித்துள்ளார். 'அந்த படம் முக்கியமான படம். அதில் என் கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும். ஒரு வேளை, அந்த கேரக்டரை நியாயப்படுத்தும் விதமாக என் நடிப்பு இல்லை என்றால், தேவையற்ற விமர்சனங்களை சந்திக்கக் கூடும். அதனால், அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் விரைவிலோ, பின்போ நடிப்பேன்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X