கையில் புள்ளைய வச்சிக்கிட்டு.. கணவருடன் விவகாரமாக விளையாடிய அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் தனது கணவர் ஜெகத் தேசாயுடன் தங்கள் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகையாக அமலா பால், மாமனாரை காதலிக்கும் விவகாரமான கதையில் நடித்து, சினிமாவிற்குள் வரும் போதே சர்ச்சை பெயரோடுத்தான் வந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் இல்லை என்றாலும், அடுத்து அமலா பால் நடித்த மைனா படத்தில் தனது இமேசை காப்பாற்றி விட்டார். இதைத் தொடர்ந்து, சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

amala paul jagat desai photos

அமலா பால்: அடுத்தடுத்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே,பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு, ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையாததால், மன அழுத்தத்தில் இருந்த இவர், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் வரம்பு மீறி நடந்து கொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார்.

amala paul jagat desai photos

கேடவார் படத்தை தயாரித்தார்: தொடர்ந்து, அமலா பாலுக்கு படவாய்ப்பு இல்லாததால்,கேடாவர் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவுக்கு பாராட்டை பெற்றது. அந்த படத்திற்கு பின் அவருக்கு ஓரளவு படவாய்ப்பு வந்தன. அதன் பின் மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்' படத்தில் பிரித்விராஜ் மனைவியாக நடித்தார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், லிப் லாக் காட்சியில் நடித்து இருந்தார்.

amala paul jagat desai photos

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், சில மாதத்திலேயே கர்ப்பிணியாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்துள்ளனர்.

amala paul jagat desai photos

இரண்டாவது குழந்தைக்கு ரெடியா: இந்நிலையில், அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் தாங்கள் இருவரும் சந்தித்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், இருவரும் குழந்தையை கையில் வைத்துஇருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், தனது ஆசை கணவருக்கு அமலா பால், உதட்டில் முத்தமும் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள், அடுத்த குழந்தைக்கு ரெடி போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X