அட்டகாசம் தாங்கலயே.. மூஞ்சில நிலா, நட்சத்திரம்லாம் மின்னுது.. ஏலியனாவே மாறிட்டாங்களோ அமலா பால்?

சென்னை: இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட தத்துவங்களை பதிவிட்டு வந்த நடிகை அமலா பால் தற்போது, பிரபஞ்சமாக மாறியுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

ஆடல் பாடல் Quarantine | Amala Paul, Manimegalai, Shriya Saran, Chithra

தமிழ் சினிமாவில் தைரியமான நடிகைகள் பட்டியலில் அமலா பாலுக்கும் முக்கிய இடம் இருக்கும்.

அதற்கு அவரது அறிமுக படமான சிந்து சமவெளி படமே மிகப்பெரிய சாட்சியாக நிற்கிறது.

ஒட்டுத் துணி இல்லாமல்

ஒட்டுத் துணி இல்லாமல்

கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்தில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக நடித்து, பாலிவுட் நடிகைகளுக்கே மிகப்பெரிய சவால் விடுத்துள்ளார். ஆடை படத்தின் ரீமேக்கில் நடிக்கவே பல பாலிவுட் நடிகைகள் தயக்கம் காட்டியதே அமலா பால் எந்த அளவுக்கு துணிச்சலானவர் என்பதை காட்டுகிறது.

ஏகப்பட்ட பிரச்சனை

ஏகப்பட்ட பிரச்சனை

சிந்து சமவெளி படத்தில் தொடங்கிய பிரச்சனை ஆடை படத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்ததாக தெலுங்கு லஸ்ட் ஸ்டோரிஸிலும் சர்ச்சையை கிளப்பும் விதமாக நடித்துள்ளார். சினிமா வாழ்க்கையில் இப்படியென்றால் சொந்த வாழ்க்கையிலும் இயக்குநர் விஜய்யுடன் விவாகரத்து, பவ்னிந்தர் சிங்கை இரண்டாவதாக மணந்தாரா? இல்லையா? என இவரை சுற்றி எப்போதும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.

ஏமாற்றும் ஆண்கள்

ஏமாற்றும் ஆண்கள்

பெண்களை காதல் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி ஆண்கள் பல காலமாக ஏமாற்றி வருவதாகவும், பெண் ஒண்ணும் குழந்தைகளை பெற்றெடுக்கும் இயந்திரம் இல்லை என்றும், உண்மையாகவே காதலித்து இருந்தால், எந்த பெண்ணையும் ஒரு ஆண் வாந்தி எடுக்க விட மாட்டான் என்றும் ஓஷோவின் வார்த்தைகளை பதிவிட்டு டிரெண்டாக்கினார்.

அனபெல்லா பேய்

அனபெல்லா பேய்

அம்மாவுடன் இந்த லாக்டவுனை கேராளவில் உள்ள அவரது வீட்டில் கழித்து வரும் அமலா பால், மாங்காய்களுக்கு முத்தமிட்டும், அருகில் உள்ள தேவாலயங்களுக்கு சென்றும், வீட்டிலேயே பார்ட்டி கொண்டாடியும் கடத்தி வருகிறார். சமீபத்தில் சீரியல் பல்புகளை மேலே போட்ட படி அனபெல்லா பேய் போல இவர் கொடுத்த போஸ் டிரோல் மெட்டீரியலாக மாறி இருந்தது.

மூஞ்சில நிலா நட்சத்திரம்

மூஞ்சில நிலா நட்சத்திரம்

இந்நிலையில், அடுத்த அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளார் நடிகை அமலா பால். தனது பக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று நினைத்து பல விதமான கருத்துக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். முகத்தில் நிலா நட்சத்திரம் எல்லாம் இருக்கும் படி ரேடியம் மேக்கப் போட்டுக் கொண்டு எடுத்த போட்டோவை தற்போது பதிவிட்டுள்ளார்.

ஈசனை போல

ஈசனை போல

ஜடா முடியில் நிலாவை வைத்து உலகத்தை காக்கும் ஈசனை போல அமலா பால் இந்த புகைப்படத்தில் இருப்பதாகவும், நல்ல கிரியேட்டிவிட்டி, உங்களுக்கு என்ன ஆச்சு, பைத்தியமாவே மாறிட்டீங்களோ, சோ க்யூட், மனசுல ஏதாச்சும் கவலையா என பலரும் பலவிதமான மீம்களை போட்டு பாராட்டியும் கலாய்த்தும் வருகின்றனர்.

சாகத் தயார்

சாகத் தயார்

முன்னதாக நடிகை அமலா பால் அந்த புகைப்படத்துடன் அனைவரும் நட்சத்திரங்கள் தான் என்றும், தான் ஒரு நிலா குழந்தை என்றும் ஏலியன் இன்வேஷன் விரைவில் வரப் போகிறது என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார். அதை பார்த்த பலரும், அழகான ஏலியன் என்றும் இப்படி ஒரு ஏலியன் இருந்தால், அதன் கையால் சாகத் தயார் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X