உங்க கூட நடிக்காதது ஒரு குறையாவே இருக்கு: ஹீரோக்களிடம் நைசாக வாய்ப்பு கேட்கும் அமலா பால்
சென்னை: முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்களை சந்தித்து அமலா பால் வாய்ப்பு கேட்கிறாராம்.
மைனா படம் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அமலா பால். அவர் நடித்த தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்கள் பேசப்பட்டன. இந்நிலையில் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதற்கிடையே அம்மணி தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாகும் முயற்சியில் இறங்கிவிட்டார். அவர் தெலுங்கு பக்கம் போக தமிழக ரசிகர்கள் வேறு கனவுக்கன்னியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அவர் என்ன தான் விஜய்யுடன் தலைவா படத்திலும், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்திலும் நடித்தாலும் அடுத்து அவர் கையில் தமிழ் படங்கள் இல்லை.

ஹீரோக்களுக்கு தூது
தலைவா ஷூட்டிங் முடிந்த கையோடு முன்னணி தமிழ் ஹீரோக்களை அமலா பால் சந்தித்து வாய்ப்பு கேட்கிறாராம். அதுவும் எப்படி, உங்களுடன் நடிக்காதது மனதில் ஒரு குறையாக உள்ளது. அந்த குறையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று பில்ட்அப்ஸ் கொடுக்கிறாராம்.

இயக்குனர்களுக்கும் தூது
மரியாதை நிமித்த சந்திப்பு என்ற பெயரில் இயக்குனர்களை சந்தித்து வாய்ப்பு தேடி வருகிறார் அமலா.

யாரும் கண்டுகொள்ளவில்லை
அவர் என்ன தான் நைசாக வாய்ப்பு கேட்டாலும் ஹீரோக்களும், இயக்குனர்களும் அவருக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லையாம். காரணம் தமிழக ரசிகர்களே அமலா பாலை கண்டுகொள்வதில்லை என்பது தான். இருப்பினும் தொடர்ந்து வாய்ப்பு தேடி வருகிறாராம் மைனா.


Click it and Unblock the Notifications











