வாந்தி எடுத்துகிட்டே இருக்கணுமா.. உண்மையா லவ் பண்ணா ஜனத் தொகையே பெருகாது.. அமலா பால் அதிரடி போஸ்ட்
சென்னை: குழந்தைகளை பெற்றெடுக்கும் இயந்திரங்களாகவே பெண்கள் பார்க்கப்படுவதாகவும், உண்மையாக ஆண்கள் பெண்களை காதலித்து இருந்தால், உலகின் ஜனத் தொகையே பெருகி இருக்காது என நடிகை அமலா பால் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.
Recommended Video
இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் மலர்ந்த காதல் திருமணமான சில காலங்களிலேயே கசந்து போய் விவாகரத்தில் முடிந்தது.
அதற்கு நடிகர்கள் தனுஷ் மற்றும் விஷ்ணு விஷால் காரணம் என்ற வதந்திகளும் அமலா பாலை சுற்றி உலா வந்தன.

மெளனமாக
மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அமலா பால் என புகைப்படங்களுடன் அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது குறித்து அமலா பால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல் நடிகை அமலா பால் மெளனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஷோ புத்தகம்
உலக தத்துவங்களை மக்களுக்கு எடுத்து வழங்கிய ஓஷோ எழுதிய "தி புக் ஆஃப் உமன்" புத்தகத்தை இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகை அமலா பால் படித்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில், அந்த புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்ட, அமலா பால், அதில் இடம்பெற்றுள்ள சில வரிகளை பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

சிறந்த கேள்விகள்
THE PROPHET-ல் உள்ள அனைத்து சிறந்த கேள்விகளும், பெண்களால் எழுப்பப்பட்ட கேள்விகளே.. காதலைப் பற்றி, திருமணத்தைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, வாழ்வின் வழிகளைப் பற்றி மற்றும் நிதர்சனத்தைப் பற்றி. மாறாக கடவுளைப் பற்றியோ அல்லது மதங்களை பற்றியோ எந்தவொரு கேள்விகளும் அதில் எழுப்பப்படவில்லை.

பெண்ணடிமை
இந்த உலகில் அனுபவிக்கப்படும் அனைத்து துன்பங்களையும் ஏற்பது பெண்கள் தான் என்பதாலே அத்தனை அற்புதமான கேள்விகளும் எழுப்பட்டு இருக்கின்றன. பெண்கள் தான் உலகில் அடிமைத் தனத்தை அனுபவிக்கின்றனர். பெண்கள் தான் எளிதில் அவமதிக்கப்படுகின்றனர். பிரசவ வலியில் தவிப்பதும் பெண்கள் மட்டும் தான்.

வாந்தி எடுத்துக்கிட்டே
காலம் காலமாக பெண்கள் பிரசவ வலியால் துடித்து வருகின்றனர். வாந்தி எடுத்துக் கிட்டே இருக்கின்றனர். ஆண்கள், பெண்களை ஒரு குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக மட்டுமே பார்க்கின்றனர். பெண்களின் உண்மையான வலிகளை உணர்வதில்லை. மோகப் பொருளாகவும், காம இச்சையை தீர்க்கும் கருவியாகவும் இந்த உலகில் பெண்கள் அறியப்படுகின்றனர்.

உண்மையான காதல் இல்லை
இத்தனை யுகங்களாக ஆண்கள் தங்களின் பொய்யான காதல் ஜாலத்தை காட்டியே ஏமாற்றி வருகின்றனர். உண்மையாகவே ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலித்து இருந்தால், நிச்சயம் அவளை கர்ப்பவதியாக்க மாட்டான் என்றும், எந்தவொரு ஆணாலும் பிரசவ வலியை ஏற்க முடியாது என்றும் அந்த வரிகள் ஆண்கள் இனத்திற்கான சவுக்கடிகளாய் நீள்கின்றன.

செத்துப் பிழைக்கிறாள்
வயிற்றில் வளரும் குழந்தை அந்த பெண்ணை ஒழுங்காக சாப்பிட விடுவதில்லை; தூங்க விடுவதில்லை; 9 மாதங்கள் கடந்த பின்னர், உயிர் போய் உயிர் வரும் பிரசவ வலியை உணர்கிறாள் அந்த பெண். கணவனுக்காகவும், குழந்தைக்காகவும் மரண வலியை ஏற்று செத்துப் பிழைக்கிறாள்.

மீண்டும் கர்பமாக்க
ஆனால், இதில் ஆண்களுக்கு எந்தவொரு வலியோ, பிரச்சனையோ இல்லை.. ஒரு முறை மரண வலியை தனது மனைவி உணர்ந்த போதும், அதன் வடுக்களை சுமந்த போதும், காதல் வலையை வீசி, அந்த கணவன் அந்த பெண்ணை மீண்டும் கர்பமாக்க முயல்கிறான். அவன் சொல்லும் காதல் வார்த்தை வெறும் வெற்றுப் பேச்சாகவே இருக்கிறது. அவள் ஒரு காமப் பொருளாகவே பார்க்கப்படுகிறாள் என்ற வலிகள் நிறைந்த வரிகளை பகிர்ந்து யாருக்கோ எதையோ சொல்ல முனைந்துள்ளார் அமலா பால்.


Click it and Unblock the Notifications











