அமலா பால் தயாரிப்பில் உருவாகிவரும் கடாவர்... மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை : நடிகை அமலாபால் அதிரடியான கேரக்டர்களில் நடித்ததன்மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

விவாகரத்திற்கு பின்பும் பல படங்கள், வெப் தொடர்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

இன்றைய தினம் தனது பிறந்தநாளை அவர் கொண்டாடி வரும் நிலையில், அவரது தயாரிப்பில் உருவாகிவரும் கடாவர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகை அமலாபால்

நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தில் துணிச்சலான கேரக்டரை ஏற்று நடித்ததன்மூலம் சிறப்பான கவனத்தை பெற்றார். தொடர்ந்து இவரது நடிப்பில் மைனா உள்ளிட்ட படங்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்து முன்னணி நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டார்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொடர்ந்து படங்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் அமலா பால்.

அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள்

அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள்

தற்போது கன்னடத்தில் யூ டர்ன் புகழ் இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் குடி யெடமைதே என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடர் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

Recommended Video

சப்பைனா என்ன அர்த்தம்னு தெரியாது | Actress Sheriina Exclusive | Filmibeat Tamil
 சொந்த தயாரிப்பு

சொந்த தயாரிப்பு

இதையடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் கடாவர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மிகவிரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் அமலாபாலின் பிறந்ததினத்தையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிணவறையில் தன்னுடைய உணவை அமலா பால் சாப்பிடுவது போல இந்த போஸ்டர் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அக்ஷய் குமாருக்கு நன்றி

அக்ஷய் குமாருக்கு நன்றி

இதையடுத்து அக்ஷய் குமாருக்கு அமலா பால் நன்றிகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரது பாராட்டு மூலம் தனது பிறந்தநாள் மிகவும் சிறப்பானதாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது பிட்னஸ் உள்ளிட்டவை எப்போதும் தனக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் அமலா பால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

இந்நிலையில் அவர் தொடர்ந்து பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் விஷேஷ் நிறுவனங்கள் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம்வரும் அமலா பால் பாலிவுட்டிலும் நிலையான இடத்தை பிடிக்க அவரது பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X