“கெட்டப்பயன் சார் இவன்”.. பூ கொடுத்து அனைவரையும் வளைத்துப்போட்ட அமலா பால் மகன்!

சென்னை: நடிகை நடிகை அமலா பால் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற "KLF Kinder Tharattazhaku Season 3" என்ற சிறப்பு ஆடை அலங்கார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தாய்மை மற்றும் கர்ப்பகாலத்தை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமலா பால் தனது இரண்டு வயது மகன் இலை (Ilai) உடனும் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது அமலா பாலின் குட்டி மகன் இலை தான். மேடையில் அமைதியாக அமராமல், தன்னுடைய குறும்புத்தனத்தால் அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார். நிகழ்ச்சிக்காக மேடையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களை ஒன்று ஒன்றாக எடுத்து, அங்கே இருந்த போட்டியாளர்களின் கைகளில் சென்று கொடுத்து தனது குழந்தைத்தனத்தையும் அன்பை வெளிப்படுத்தினார்.

Amala paul Son

அமலா பாலின் மகன்: இலையின் இந்த அழகான சேட்டையை பார்த்து அரங்கமே சிரிப்பில் மூழ்கியது. பலரும் கைதட்டி ரசித்ததுடன், அமலா பாலும் மகனின் குறும்புகளை ரசித்து புன்னகைத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கெட்டப்பயன் சார் இவன் என கிண்டலாகவும், பாசமாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அம்மாவை விட மகன் தான் இப்போது ஸ்டார் என்றும் கூறி வருகிறார்கள். சினிமா பிரபலங்களின் குழந்தைகள் அடிக்கடி இணையத்தில் கவனம் பெறுவது வழக்கம் தான். ஆனால், எந்த வித செயற்கைத்தனமும் இல்லாமல், இயல்பான குழந்தைத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

Amala paul Son

க்யூட் வீடியோ: நடிகர் அமலா பால் தலைவா படத்தில் நடித்த போது இயக்குநர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பல ஆண்டுகள் தனிமையில் இருந்து அமலா பால் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது அமலா பால் மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை திருப்பு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X