கர்ப்பமடைந்த பிறகுதான் திருமணமே செய்துகொண்டேன்.. அமலா பால் ஓபனா சொல்லிட்டாங்களே

சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடன் நடித்திருக்கும் அவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. பிறகு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

சாமி இயக்கிய படம் சிந்து சமவெளி. அந்தப் படம் கொஞ்சம் விவகாரமான கதையை கொண்டது. அந்தப் படத்தில்தான் அமலா பால் நடித்து கோலிவுட்டில் தனது கரியரை தொடங்கினார். முதல் படத்திலேயே போல்டான கேரக்டரை ஏற்றதன் காரணமாக விரைவிலேயே பலரது கவனத்துக்கு ஆளானார் அமலா. அதனையடுத்து வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இயக்குநருடன் திருமணம்: அப்போதுதான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்தார். அப்போது அமலா பாலும் இயக்குநர் விஜய்யும் காதலித்தனர். ஒருவழியாக அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள வீட்டில் அனுமதி கிடைத்தது. இருவரும் திருமணம் செய்து சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். திருமணத்துக்கு பின்பும் நடித்துக்கொண்டிருந்தார் அமலா. இப்படிப்பட்ட நிலைமையில் திடீரென அவர்கள் இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொண்டார்கள்.

அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு தனது கவனத்தை சினிமாவில் முழுக்க செலுத்தினார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் . தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேசமயம் அவர் ஒருவரை காதலித்துவருவதாக தொடர்ந்து பேசப்பட்டது. ஆனால் யார் என்று அவர் ரசிகர்களுக்கு அறிவிக்காமல் அமைதியே காத்தார்.

Amala Paul says she got married only after she became pregnant
Photo Credit:

இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் திடீரென ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். திருமணத்துக்கு பிறகு ஜகத்துடன் காதலாகி வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் அமலாவுக்கு இலை என்ற மகன் பிறந்தான். திருமணம் செய்துகொண்டாலும் நடிப்பதில் கவனம் செலுத்திவந்த அவர் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது கேரக்டருக்கு குறைந்த முக்கியத்துவமே என்றாலும் படம் கவனம் ஈர்த்தது.

அமலா பால் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் அமலா பால். அவர் அளித்த பேட்டியில், "நான் முதலில் ஜகத் தேசாயை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பமடைந்துவிட்டேன். முதலில் கர்ப்பமடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொண்டேன். இலை எங்கள் வாழ்க்கையில் வந்தது ரொம்பவே சந்தோஷம். குழந்தைக்காக நாங்கள் எங்களது ஈகோ அனைத்தையும் உடைத்து தூக்கி எறிந்துவிட்டோம்.

பொறுமை இல்லை: குழந்தையின் வருகை எங்களிடையே இருந்த ரிலேஷன்ஷிப்பை மேலும் பலமாக்கியது. அதனால்தான் இந்த உறவை நான் டிவைன் என்று சொல்கிறேன். அதேபோல் இலை வந்த பிறகுதான் நான் இவ்வளவு பொறுமையாக இருப்பேனா என்று தோன்றியது. ஏனெனில் எனக்கெல்லாம் பொறுமையே இல்லை. எனது அண்ணன்கூட என்னிடம், நீ இவ்வளவு பொறுமையாக இருக்கிறாயே என்று ஆச்சரியப்பட்டார்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X