Amala Paul: ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் பப்பி ஷேம் போட்டோ.. அமலா பால் என்ஜாய் பண்ணுறாங்களே!
சென்னை: நடிகை அமலா பால் மற்றும் அவரது கணவர் தேசாய் குறித்த தகவல்கள் என்றால் ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் தான். தனது முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின், இரண்டாவது திருமணம், அதுவும் காதல் திருமணம் செய்து கொண்டு செம ஜாலியாக வாழ்க்கையை ரசித்து வருகிறார் அமலா பால். இப்படி இருக்கும்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து கொண்டு ஆமைகளுடன் நீந்தும் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அமலா பால், தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளில் ஒருவர். தனது திரை வாழ்க்கையில் அவர் தமிழ், மலையாளம். தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக இருந்துள்ளார். கடைசியாக இவர் நடித்த இரண்டு மலையாளப் படங்களும் பெரும் கவனத்தை ஈர்த்தது. தமிழில் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அது மைனா. இந்த படத்தில் டி. இமானின் இசையிலான பாடல்கள் இவருக்கு பெரும் வரவேற்பைப் ரசிகர்கள் மத்தியில் பெற்றுக் கொடுத்தது.

இவர் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணம் விரைவிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னரும் இவர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படங்களில் அதிகம் நடித்து பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தார். இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
காதல் கணவர் தேசாய்: விவாகரத்துக்குப் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, தேசாய் என்பவருடன் காதலில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இலாய் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்ததாக அமலா பால் ஒருமுறை தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள ரசிகரகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கணவருடன் ரொமான்ஸ்: அதுவும், அமலா பாலின் கணவர் இலாய், அமலா பாலை உருகி உருகி காதலிப்பதை பார்த்து பலரும் பொறாமைப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு ஆமைகளுடன் நீந்தியது, மீன்களுடன் நீந்தியது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் மான்கள், முதலை மற்றும் சிறுத்தையைப் பார்த்தது, தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் தனது கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை தாராளமாக வாரி வழங்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











