ஒரே ஜாலியோ ஜிம்கானாவா இருக்கே.. கர்ப்பமான அமலா பால் வெளியிட்ட வீடியோ.. ஒரே முத்த மழை தான்!

சென்னை: நடிகை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு கர்ப்பமாகி உள்ள நிலையில், தனது கணவருடன் படு ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார். கடந்த நவம்பர் மாதம் தான் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துக் கொண்டார் அமலா பால்.

2009ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நீலதாமரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். 2010ம் ஆண்டு ஒரே வருஷத்தில் தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி மற்றும் மைனா என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டு கோலிவுட்டில் கால் பதித்தார்.

Amala Paul shares her baby bump video and her hubby shares romantic kisses

ஏ.எல். விஜய்யுடன் காதல்: 2011ம் ஆண்டு சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வத் திருமகள் படத்தில் நடித்த அமலா பாலுக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் உருவானது. அந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ஏ.எல். விஜய் இயக்கிய தலைவா படத்திலும் அமலா பால் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் முடிந்த நிலையில், ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே 2, ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இரண்டாவது திருமணம்: ஆடை படத்துக்குப் பிறகு சினிமாவில் பயங்கர அடி அமலா பாலுக்கு விழுந்தது. ஆடையே அணியாமல் முழு நிர்வாணமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த படத்தை இந்தியில் நடிக்கக் கூட எந்தவொரு நடிகையும் முயற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடாவர் படத்தைத் தயாரித்தார். அந்த படமும் ஓடிடியில் வெளியாகி பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பின்னர் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டவராக சுற்றிக் கொண்டிருந்த அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை காதலிக்க ஆரம்பித்து திடீரென கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார்.

கர்ப்பமான அமலா பால்: திருமணமான 2 மாதத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதை புத்தாண்டு ட்ரீட்டாகவே தனது ரசிகர்களுக்கு அறிவித்து விட்டார் அமலா பால். சினிமா வாய்ப்புகள் முற்றிலும் முடங்கிப் போன நிலையில், குழந்தைப் பெற்றுக் கொள்ளும் முடிவை ஏற்றுக் கொண்டாரா அமலா பால் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முத்த மழை: புத்தாண்டுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அமலா பால் தற்போது அந்த நேரத்தில் எடுத்த வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளார். கணவர் ஜகத் தேசாய் திடீரென சர்ப்ரைஸாக அமலா பால் உதட்டில் முத்தம் கொடுப்பது தொடங்கி, அமலா பாலின் வயிற்றை தடவிப் பார்ப்பது என குழந்தை உருவாகி வரும் மகிழ்ச்சியில் இருவரும் சந்தோஷ தருணங்களை முத்த மழையால் நனைத்து வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. நடிகைகள் ஷிவதா, அனுபமா பரமேஸ்வரன், பியர்லி மானி உள்ளிட்ட பலர் அமலா பாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X