இப்படியொரு கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. போட் ஹவுஸில் ஆனிவர்ஸரி கொண்டாடிய அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஜகத் தேசாய் என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், தனக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து விட்டது என்றும் திருமணநாள் கொண்டாட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அமலா பால்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை அமலா பால் முதல் படத்திலேயே பெரிய சர்ச்சையில் சிக்கினார். மாமனார் உடன் உறவுக் கொள்வதாகவும் அமலா பாலின் கணவராக ஹரிஷ் கல்யாணும் அந்த படத்தில் நடிக்க இருவருக்கும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின.

amala paul wedding anniversary heroine

ஆனால், அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் அத்தனை விமர்சனங்களையும் சுக்குநூறாக உடைத்துக் கொண்டு அமலா பால் மைனா படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தார்.

காதல், திருமணம், விவாகரத்து:
சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வத் திருமகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அமலா பாலுக்கும் அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் காதல் ஏற்பட விஜய்யை வைத்து இயக்கிய தலைவா படத்திலும் அமலா பாலை ஹீரோயினாக்கினார் ஏ.எல். விஜய். அந்த படத்தைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சில பல பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி, விஷ்ணு விஷால் உடன் ராட்சசன், ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என நடிப்பில் உச்சம் தொட்டார் அமலா பால். ஆனால், அதே வேகத்தில் ஆடை பட சர்ச்சை காரணமாக அவருக்கு பல பட வாய்ப்புகள் குறைந்தன.

ஒரு வருஷம் ஆகிடுச்சு: கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அமலா பால் இந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவாக மாறினார். திருமணத்துக்கு முன்பே அமலா பால் கர்ப்பமாகி விட்டார் என்றெல்லாம் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும் திருமண நாளில் தனது கணவர் கேரளாவில் உள்ள போட் ஹவுஸில் கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட்டை வீடியோவாக வெளியிட்டு இப்படியொரு கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

போட் ஹவுஸில் ஆனிவர்ஸரி: நடிகை அமலா பால் தனது கணவர் மற்றும் மகனுடன் போட் ஹவுஸில் ஆனிவர்ஸரி கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு எக்கச்சக்க லைக்குகளை அள்ளியுள்ளார். மேலும், கடலுக்கு நடுவே தனியாக ஒரு இடத்தில் லஞ்ச் டின்னர் மேடை அமைக்கப்பட்டு ரொமான்டிக்காக ஆனிவர்ஸரியை அமலா பாலுக்காக அவரது கணவர் ஜகத் தேசாய் செய்துள்ளார். இப்படியெல்லாம் செய்தால் தான் அமலா பால் போன்ற நடிகைகளை சந்தோஷப்படுத்த முடியும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X