ஏகப்பட்ட ஆண்களுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் அமலா பால்.. 2வது கணவர் மற்றும் குழந்தை எங்கே?
சென்னை: நடிகை அமலா பால் தனது பிறந்தநாளை சமீபத்தில் பாலி தீவில் கொண்டாட சென்று இருந்தார். 2வது கணவர் ஜகத் தேசாய் மற்றும் அமலா பாலின் குழந்தை என அடிக்கடி அங்கே எடுத்துக் கொண்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 33 வயதிலேயே 2 முறை திருமணம் செய்துக் கொண்டு குழந்தைக்கும் தாயாகியுள்ள அமலா பால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் நீச்சல் குள வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பாலுக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சியான் விக்ரம் உடன் இணைந்து தெய்வத்திருமகள், விஜய்யுடன் இணைந்து தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் அனைத்து ரசிகர்களை மட்டுமின்றி திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரீமேக்கே ஆகல: ஆடை படத்தை இந்தியில் கங்கனா ரனாவத் ரீமேக் செய்து நடிக்கப் போவதாக எல்லாம் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அமலா பாலுக்கு இருந்த தன்னம்பிக்கையும் தைரியமும் மற்ற ஹீரோயின்களுக்கு வராத நிலையில், அந்த படத்தை எந்த மொழியிலுமே ரீமேக் செய்ய எந்தவொரு நடிகையும் முன்வரவில்லை. காமினி கதாபாத்திரத்தில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் அமலா பால் நடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
நீச்சல் குளத்தில் ஆண்களுடன்: அமலா பால் தனது 2வது கணவர் ஜகத் தேசாய் மற்றும் குழந்தை இலையுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். உடல் எடை அதிகரித்துள்ள நிலையில், சில விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வரும் அமலா பால் அடுத்ததாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகவில்லை. இந்த ஆண்டு அவர் நடிப்பில் ஆடு ஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் உள்ளிட்ட மலையாள படங்கள் வெளியாகின. இந்நிலையில், நீச்சல் குளத்தில் ஏகப்பட்ட ஆண்களுடன் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக அவர் குளித்து விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு தீனிப்போடும் வகையில் தற்போது வெளியிட்டுள்ளார்.
கணவரும் குழந்தையும் எங்கே?: அமலா பால் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அவர் சோலோவாக செல்ஃபி ஸ்டிக் வைத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் கையில் சரக்குடன் ஆட்டம் போட்டும் குளித்தும் விளையாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கணவர் மற்றும் குழந்தை எங்கே காணோம் என கேள்வி எழுப்பியுள்ளனர். அமலா பாலின் நீச்சல் குள வீடியோவையே அவரது கணவர் தான் எடுத்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட்டும் போட்டு வருகின்றனர். நடிகை அமலா பாலை விட அம்மா அமலா பாலுக்கு நாங்க இனிமேல் ஃபேன் என ரசிகர்கள் குண்டானாலும் அமலா பால் கவர்ச்சி குறையாமல் கூடிக் கொண்டே போகிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











