குழந்தையை விட்டுட்டு.. 2வது கணவருடன் சொகுசு படகில் லிப் லாக் கிஸ், சரக்கு என ஜாலி பண்ணும் அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் இந்த காதலர் தினத்தை தனது 2வது கணவர் ஜெகத் தேசாய் உடன் செம ஜாலியாகவும் ரொமாண்டிக்காவும் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு சிலரை வெறுப்பேற்றி உள்ளார். நடிகை நயன்தாராவை போலவே இவரையும் பலரும் கிண்டலும் கேலியுமாக பேசினர். இந்த திருமண வாழ்க்கை நீடிக்காது என சாபமே விட்டார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஒரு பக்கம் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாண்டு ஒரு காதலர் தின வாழ்த்தையும் தனியாக இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை போட்டு தங்களின் தனிப்பட்ட சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

Amala Paul shares her romantic and luxurious Valentine s Day with her husband
Photo Credit:

ஆனால், குழந்தையை தனது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு ஜெகத் தேசாய் உடன் சொகுசு படகில் செம ஜாலியாக காதலர் தினத்தை நடிகை அமலா பால் கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

முதல் திருமணத்தில் என்ன பிரச்னை?: முதல் திருமணம் உண்மையாகவே டாக்ஸிக்கா? அல்லது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருவருக்கும் வருவதில்லையா என தெரியவில்லை. 2வது திருமணம் செய்துக் கொண்ட பின்னர், நிறைய அட்ஜெஸ்ட் செய்ய கற்றுக் கொண்டு பல பிரபலங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஏ.எல். விஜய் தனது 2வது திருமண வாழ்க்கையில் ஹேப்பியாக வாழ்ந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அமலா பாலும் 2வது திருமண வாழ்க்கையை ஜமாய்த்து வருகிறார்.

சொகுசு படகில் சரக்கு, லிப் கிஸ்: காதலர் தினத்துக்கு கணவருடன் தனியாக என்ஜாய் செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டு வைரலாக்கி விடுகின்றனர். சொகுசு படகில் சரக்கடித்துக் கொண்டும் கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்துக் கொண்டும் ஜாலியாக இருக்கும் தருணங்களை நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ளார். மீண்டும் பழையபடி சினிமாவில் ஆர்வம் செலுத்துவாரா? அல்லது 2வது குழந்தைக்கு ரெடியாகி விட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களின் ரொமாண்டிக் புகைப்படங்களும் லிப் கிஸ் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X