Amala Paul: அமலா பால் மகன் எப்படி இருக்காரு பாருங்க.. புத்தாண்டு கொண்டாட்டம் வீட்டில் களைகட்டுதே!

சென்னை: நடிகை அமலா பால் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை வேறலெவலில் கொண்டாட்ட மோடுக்கு மாறியுள்ளார். சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை போட் ஹவுஸில் மஜாவாக கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தனது மகனின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா என ஏகப்பட்ட டாப் நடிகைகள் தென்னிந்திய திரையுலகத்தையே ஆட்சி செய்துக் கொண்டிருந்த போது சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.

year ender 2024 amala paul

ஆரம்பத்திலேயே சர்ச்சையுடன் களமிறங்கிய அமலா பால் அதே ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து மக்களுக்கு மிகவும் பிடித்த பக்கத்து வீட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டார்.

திருமணத்தில் தோல்வி: மதராசப்பட்டினம் படத்தை இயக்கி பிரபலமான ஏ.எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம், அனுஷ்கா நடித்து வெளியான தெய்வத்திருமகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு விஜய்யுடன் தலைவா படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், ஏ.எல். விஜய்யுடனான காதல் திருமணம் நீடித்து நிற்கவில்லை. விவாகரத்து செய்து இருவரும் பிரிந்த நிலையில், ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருந்த அமலா பாலுக்கு மீண்டும் காதல் வழியை காட்டி திருமணம் செய்துக் கொண்டார் ஜகத் தேசாய்.

அழகான ஆண் குழந்தை: அமலா பாலின் முதல் திருமணத்தில் அவருக்கு குழந்தை பிறக்காத நிலையில், 2வது திருமணத்தில் கர்ப்பமாகி அழகான ஆண் குழந்தைக்கும் இந்த ஆண்டு அம்மாவாக மாறினார் அமலா பால். இலை என வித்தியாசமாக தனது மகனுக்கு பெயர் சூட்டிய அமலா பால் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொடர்ந்து தனது மகனை வளர்ப்பதில் இந்த ஆண்டு முழுவதும் கவனம் செலுத்தி வருகிறார்.

புத்தாண்டு கொண்டாட்டம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2வது திருமணம் செய்துக் கொண்டதில் இருந்து வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றுவது என ஒரு வருடமாக கொண்டாட்ட மயமாகவே வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் அமலா பால் தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்னிந்திய ரசிகர்கள் பலரும் ஆடை பட நடிகை அமலா பாலுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு அமலா பால் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X