டிஸ்கோ ஸ்டைலில் ஜிகுஜிகு டிரெஸ்.. நண்பர்களுடன் பிறந்த நாளை அப்படி கொண்டாடிய நடிகை அமலா பால்!
சென்னை: நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய அமலா பால், அதுதொடர்பான புகைப்படங்களை இப்போது வெளியிட்டுள்ளார்.
அமலா பால், இன்ஸ்டாவில் அதிக ஆக்ட்டிவாக இருக்கிறார். அடிக்கடி அளவில்லாத புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடிக்கிறார்.
இதற்கு, ஓடிவந்து கொத்துக் கொத்தாக லைக்ஸ்களை குவித்திருக்கிறார்கள், நெட்டிசன்கள்.

அந்த பறவை போல
அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

வெப்சீரிஸ் ரீமேக்
மலையாளத்தில், பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிசின் ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள அமலா பால், மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பாவ்னீந்தர் சிங்
இயக்குநர், ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இது தமிழ், மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது காதலரான பாவ்னீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது.

ஜங்கிள் தீம்
இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவின. ஆனால், அந்த திருமணம் பற்றி வதந்தி என்று சொன்னார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பால் கடந்த 26 ஆம் தேதி தன் 28 வது பிறந்த நாளை கொண்டாடினார். jungle theme மை வைத்து கொண்டாடியுள்ளார்.

டிஸ்கோ ஸ்டைல்
அந்தப் புகைப் படங்களை இப்போது ஷேர் செய்துள்ளார். அதில், டிஸ்கோ ஸ்டைலில் வளுவளு உடையில் அமலா பால் இருக்கிறார். மினுங்கும் டிரெஸ்சில் இருக்கும் அவர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

லைவ்ல வாங்களேன்
அவருக்கு சில மலையாள நடிகைகள், நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பலர் உங்க டிஸ்கோ டிரெஸ் சிறப்பு என்றும், இந்த உடையில் அழகாக இருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளனர். சில நெட்டிசன்ஸ், வாழ்த்து சொன்னா, ரிப்ளை பண்ண மாட்டீங்களா? என்று கேட்டுள்ளனர். சிலர், அப்படியே இன்ஸ்டா லைவ்ல வாங்களேன் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











