மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டாரா அமலா பால்.. திடீரென வெளியிட்ட செம கிளாமர் புகைப்படம்.. கூட யாரு?
சென்னை: நடிகை அமலா பால் கடந்த ஆண்டு இறுதியில் ஜகத் தேசாய் என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை அமலா பால் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பின்னர் அமலா பால் நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர் போல ஈஷா யோகா மையத்திலும் பாலி தீவில் உள்ள சில கோயில்களுக்கும் சென்று வந்தார்.

அதன் பின்னர் திடீரென தொழிலதிபர் ஜகத் தேசாயை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அறிவித்தார். சமீபத்தில், இருவருக்கும் அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தையுடன் பாலி தீவுக்கு சமீபத்தில் அமலா பால் சென்றபோது ஆள் அடையாளமே தெரியாமல் நல்லா பப்ளியாக மாறியிருந்தார்.
மீண்டும் சினிமாவில் அமலா பால்: நடிகை அமலா பால் திருமணத்துக்கு முன்பாக நடித்திருந்த ஆடு ஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் என இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாகி இருந்தன. இரண்டு படங்களுமே அமலா பாலுக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் எடை அதிகரித்த நிலையிலும் விளம்பரத்தில் எல்லாம் சமீபத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு கவுனில் தொடை தெரிய: நடிகை அமலா பால் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகின்றனர். கோவாவில் நடைபெறும் IFFI சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொள்ள கணவருடன் கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஒரு கால் மட்டும் தொடையளவுக்கு தெரிய நின்றுக் கொண்டு கொடுத்த போஸ் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார் அமலா பால். அதில், ஷூட் என்பதை குறிக்கும் விதமாக கேமரா எமோஜியை அமலா பால் பதிவிட்டுள்ள நிலையில், கூடிய சீக்கிரத்தில் மீண்டும் புதிய படங்களில் அமலா பால் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











