ஒரு பார்ட்டி.. ஃபுல் போதையில் அண்ணன்.. அமலா பால் என்ன செஞ்சாங்க தெரியுமா?.. அவரே சொல்லிட்டாரே

சென்னை: ஜகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் அமலா பால். அவர்களுக்கு இலை என்கிற மகன் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை அவர்கள் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருக்கும் அவர்; தொடர்ந்து திரைத்துறையில் பயணிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

கேரளாவில் பிறந்து சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக அமலா பால்; அந்தப் படத்தின் சர்ச்சைக்குரிய கதையின் காரணமாக முதல் படத்திலேயே ஃபேமஸ் ஆனார். படம் அப்படி இப்படி இருந்தாலும் அம்மாதிரியான கேரக்டரை ஏற்றதற்கே தனி தைரியம் வேண்டும் என்று பலரும் அவருக்கு புகழாரம் சூடினார்கள். அப்படத்துக்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அமலாவுக்கும் பெரிய வெளிச்சத்தை மேற்கொண்டு பெற்றுக்கொடுத்தது.

முன்னணி நடிகை: மைனாவுக்கு பிறகு பலரும் அவரை புக் செய்தார்கள். அதன்படி ஆர்யா உள்ளிட்டோருடன் நடித்த அவர் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு வர ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இரண்டு பேருக்குமிடையே காதல் மலர்ந்தது. விஜய் சினிமாவில் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர். எனவே இவர்களது காதல் பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது.

Amala Paul spoke about her brother in a recent interview
Photo Credit:

ஜோராக நடந்த திருமணம்: வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது திருமணத்துக்கு பின்பும் அமலா பால் நடிக்கக்கூடாது என்று விஜய் வீட்டிலிருந்து கண்டிஷன்கள் வைக்கப்பட்டதாகவும்; அதற்கு அமலா ஒத்துக்கொள்ளாததுதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

இரண்டாவது திருமணம்: இது தவிர்த்து இன்னும் சில காரணங்களும் சொல்லப்பட்டன. விஜய்யை பிரிந்த அமலா பால் ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படத்தில் ஆடையே இல்லாமல் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. திருமண முறிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்து கரியரில் கவனம் செலுத்திய அவர்; ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திடீரெனவும், சிம்ப்பிளாகவும் நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

நிம்மதியான வாழ்க்கை: திருமணத்துக்கு ஒரு மாதம் முன்பே கர்ப்பமான அமலா பாலுக்கு மகன் பிறந்தார். அவருக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போது முழுக்க முழுக்க குடும்ப தலைவியாக மாறியிருக்கும் அவர்; தனது மகனை வளர்ப்பதில் முழு கவனத்தையும் வைத்திருக்கிறார். மேற்கொண்டு சினிமாவில் அவர் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.

அமலாவின் பேட்டி: நடிகை அனுஹாசன் எடுத்த அந்தப் பேட்டியில் பேசிய அமலா பால், "ஒருமுறை நாங்கள் ஒரு பார்ட்டி செய்தோம். அதில் எனது அண்ணன் அவ்வளவு குடித்திருந்தார். அப்போது அவரிடம் நான் என்னுடைய பூனைகளுக்கு கொடுக்கக்கூடிய பிஸ்கெட்டுகளை கொடுத்துவிட்டேன். நானும் அவரும் அந்த மாதிரிதான் இருப்போம்" என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்களோ பாவம் அமலாவின் அண்ணன் என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X