ஆ...ஊ... கத்தியுடன் காட்டுக்குள் களேபரம் செய்த அமலா பால்!

By Sudha

ஹைதராபாத்: மைனா...மைனா என்று விதார்த் பார்த்துப் பார்த்து உருகி ரசித்த அமலா பால் இப்போது அலேக் அவதாரம் எடுத்துள்ளார் இட்டரம்மாயிலதோ படத்துக்காக.

தெலுங்குப் படமான இதில், கையில் வாளும் கண்களில் குரோதமுமாக அதகளம் செய்துள்ளார் சண்டைக் காட்சிகளில். கிச்சா மாஸ்டரின் சண்டை டிப்ஸ்களை வடிவேலு பட பாணியில் 'க க க கொ' அதாவது கன கச்சிதமாக கவ்விக் கொண்டு கலக்கி எடுத்திருக்கிறாராம்.

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமலா பாலுக்கு நிறைய சண்டைக் காட்சிகளாம். அவருக்கு ஜோடியாக அல்லு அர்ஜூன் நடிக்கிறாராம்.

காதல் நிறைய சண்டையும் நிறைய

காதல் நிறைய சண்டையும் நிறைய

இந்தப் படம் முழுக்க முழுக்க சண்டைப் படம் கிடையாது. மாறாக அதிரடி காதல் படமாம். கூடவே நிறைய சண்டைக்காட்சிகளாம். படத்தில் அத்தனை பேரும் சண்டை போடும் அளவுக்கு நிறைந்திருக்கிறதாம் ஆக்ஷன் காட்சிகள்.

சிக்ஸ் பேக் அர்ஜூன்

சிக்ஸ் பேக் அர்ஜூன்

படத்தின் நாயகனான அல்லு அர்ஜூனுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. அதாவது தெலுங்கு ஹீரோக்களிலேயே முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்தவர் இவர்தானாம். அதனால் இவருக்கு எனர்ஜி ஸ்டார் என்று கூட ஒரு பெயர் உண்டாம்.

2 பேரில் ஒருவர்தான் அமலா பால்

2 பேரில் ஒருவர்தான் அமலா பால்

அமலா பால் இப்படத்தில் நாயகியாக நடித்தாலும் அவர் கூட அவருடன் மேலும் ஒரு நாயகி்யும் இருக்கிறாராம். ஆனால் முதல் நாயகி அமலா பால்தானாம். அதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்தான் காண்டிராக்டில் கையெழுத்தே போட்டாராம்.

தாய்லாந்து காட்டில் அமலா பால் போட்ட சண்டை

தாய்லாந்து காட்டில் அமலா பால் போட்ட சண்டை

அமலா பால் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை தாய்லாந்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் வைத்து படமாக்கினராம். அப்போது அமலா பால் போட்ட சண்டையைப் பார்த்து மாஸ்டர் கிச்சாவே அசந்து போய் விட்டாராம். காரணம், அமலா பால் கத்தியைப் பிடித்த லாவகம் அப்படியாம்...

பார்சிலோனாவில் பாதி ஷூட்டிங்

பார்சிலோனாவில் பாதி ஷூட்டிங்

பார்சிலோனா நகரில்தான் பாதிப்படத்தை ஷூட் செய்துள்ளனராம். பிற காட்சிகளை தாய்லாந்து, ஆந்திரக் காடுகளில் வைத்து சுட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X