ஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..!

பிரபல வெப் சீரிஸான லஸ்ட் ஸ்டோரிஸ்-ன் தெலுங்கு வெர்ஷனில் நடிகை அமலா பால் நடிக்க உள்ளார்.

Recommended Video

Amala Paul in Netflix Series : அடுத்து 'சுய இன்பம்' சீரியஸில் நடிக்கிறார் அமலா பால்-வீடியோ

சென்னை: லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ்-ன் தெலுங்கு வெர்ஷனில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஆப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தி வெப் சீரிஸ் தான் லஸ்ட் ஸ்டோரிஸ். நான்கு கதைகளாக விரியும் இத்தொடரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இத்தொடரில் தான் கியாரா அத்வானி, 'சுய இன்பம்' சர்ச்சையில் சிக்கினார்.

அமலா பால் நடிப்பது உறுதி

அமலா பால் நடிப்பது உறுதி

இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் தொடர் தெலுங்கில் உருவாகிறது. இதில் ஒரு கதையில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா இத்தொடரை தயாரிக்கிறார்.

அமலாவின் நடிப்பு

அமலாவின் நடிப்பு

அமலா பாலின் இயல்பாக நடிப்பு இயக்குனர் நந்தினி ரெட்டியை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதையடுத்து அவர் அமலா பாலை அணுகி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிப்பது குறித்து கேட்டார். மிகவும் உற்சாகமடைந்த அமலா, உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார்.

முக்கிய ரோலில் ஜெகபதி பாபு

முக்கிய ரோலில் ஜெகபதி பாபு

தெலுங்கில் இந்த கதையில் நடிக்க அமலா பாலை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்கிறாராம் இயக்குனர் நந்தினி ரெட்டி. இந்த முதல் கதையில் அமலா பாலுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மற்ற மூன்று கதைகள்

மற்ற மூன்று கதைகள்

மற்ற மூன்று கதைகளில் நடிப்பவர்கள் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாம். இந்த கதைகளை சந்தீப் வங்கா, தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த கதைகள் அனைத்து ஸ்கிரிப்ட் நிலையில் தான் உள்ளது. ஸ்கிரிப்ட் பணி முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

ஆடையில் ஆடையில்லாமல்

ஆடையில் ஆடையில்லாமல்

நடிகை அமலா பால் கடைசியாக நடித்த படம் ஆடை. இதில் பெரும்பாலான காட்சிகளில் ஆடை அணியாமல் அமலா பால் நடித்திருந்தார். அவரது இந்த தைரியமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளது, தைரியமான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X