அமலா பால் கணவருடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்.. மீண்டும் கோலிவுட்டில் நடிக்கப்போறாரா?

சென்னை: நடிகை அமலா பால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். ரசிகர்கள் சிலருடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்துள்ளார். மீண்டும் அவர் தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆரம்பத்தில் அறிமுகமானது அமலா பாலுடன் இணைந்து நடித்த சிந்து சமவெளி படத்தில் தான். அந்த படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், மைனா திரைப்படம் அமலா பாலுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Amala Paul visits Tiruvannamalai Temple with her family

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணம் இருவருக்கும் செட்டாகாத நிலையில் இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர்.

இரண்டாவது திருமணம்: தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2, விஷ்ணு விஷாலின் ராட்சசன் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய அமலா பால் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் தமிழில் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. விஜய் சேதுபதியுடன் ஒப்பந்தமான படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், இரண்டாவதாக ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தையும் பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

திருவண்ணாமலையில் அமலா பால்: அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் அமலா பால் பிகினி உடைகளை அணிந்து கொண்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்துள்ளார். மீடியாக்களில் அதன் காட்சிகள் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

மேல் சட்டை அணியாமல்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமலா பாலின் கணவர் மற்றும் மகன் மேல் சட்டை அணியாமல் சாமி தரிசனம் செய்ததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சில இளைஞர்கள் அமலா பாலுடன் நின்று புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர்.

மீண்டும் தமிழ் சினிமாவில்: கடைசியாக அமலா பால் கடாவர் எனும் படத்தை தமிழில் தயாரித்து நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் தமிழில் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாத நிலையில், தற்போது திருவண்ணாமலைக்கு அமலா பால் வந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவில் அவர் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஆடு ஜீவிதம்: கடந்த ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் சுகுமார் உடன் அவர் இணைந்து நடித்த ஆடு ஜிவிதம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 150 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது அந்த படம். லெவல் கிராஸ் என்கிற படத்திலும் அமலா பால் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அமலா பால் தமிழ் சினிமா மற்றும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X