நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால்.. ஃபேஷன் ஷோவில் பங்கேற்க போகிறாராம்.. வீடியோ பாருங்க!

திருவனந்தபுரம்: நடிகை அமலா பால் விரைவில் அம்மாவாகப் போகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை அவரது கணவர் கோலாகலமாக நடத்தினார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அமலா பாலை வாழ்த்தினர்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கணவர் இந்த நேரத்தில் தன்னை எப்படி எல்லாம் கவனித்துக் கொள்கிறார் என்பதை அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு தான் ரொம்பவே சந்தோசமாக இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டி வருகிறார்.

Amala Paul will attend fashion show with baby bump and shares a video

விவாகரத்து, சினிமா வாய்ப்பு ஒட்டுமொத்தமாக குறைந்தது என அடுத்தடுத்து வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்று விட்டதாக அமலா பால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

நடிகை அமலா பால்: சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். முதல் படமே ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவரது இரண்டாம் படமான மைனா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாகவே மாறியது. அதன் பின்னர் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் ஹீரோயினாக நடித்த அமலாபால் இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரொம்ப ஹாப்பி: திருமணத்துக்கு பிறகு அவருக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. சினிமாவில் சரிவை சந்தித்து வந்த அமலாபால் ஒரு கட்டத்தில் சன்னியாசி போலவே மாறிவிட்டார். அவரது தயாரிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் சொதப்பிய நிலையில், சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தவர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ரொம்பவே சந்தோஷமாக உள்ளார்.

கர்ப்ப வயிற்றுடன் ஃபேஷன் ஷோ: நடிகை அமலாபால் நிறை மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் விரைவில் அவர் அம்மாவாக போகிறார். இந்நிலையில் கேரளாவில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கூறியுள்ளார்.

கவர்ச்சி உடையில் கலக்கலாக: கர்ப்ப வயிற்றுடன் கவர்ச்சி கவுனை அணிந்து கொண்டு நடிகை அமலாபால் நடத்திய போட்டோ ஷூட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நிறை மாத கர்ப்பிணியாக இருந்தாலும் அழகுக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்றும் நிச்சயம் நீங்கள்தான் முதல் பரிசை வெல்வீர்கள் எனது ரசிகர்கள் அவரது வீடியோவை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னதாக அமலாபால் பிருத்விராஜ் உடன் இணைந்து நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எமி ஜாக்சனை போல: நடிகை எமி ஜாக்சன் குழந்தையை பெற்று விட்டு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருவதை போல அமலா பாலும் விரைவில் குழந்தையை பெற்றெடுத்து விட்டு மீண்டும் நடிக்க வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் கணவருடன் வசித்து வரும் அமலா பால் தொடர்ந்து பல சினிமா நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X