குறும்பா என் உலகே நீதான் டா.. குழந்தையை கொஞ்சும் அமலா பால்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்
சென்னை: அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதனையடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில்தான் மகன் பிறந்தான். இலை என்று பெயர் வைத்திருக்கிறார் அமலா பால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்தார். அதற்கு விஜய், ஆர்யா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார்.

ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்: தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர். அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
அமலா பாலின் கரியர்: விவாகரத்துக்கு பிறகு அமலா பால் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்தில் நிர்வாணமாக தோன்றி பரபரப்பாக பேசவைத்தார் அமலா பால். தொடர்ந்து கடாவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதற்கிடையே அமலா பால் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணமே நடந்துவிட்டதாகவும் தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. ஆனால் அமலா பால் அமைதியாகவே இருந்தார்.
இரண்டாவது திருமணம்: இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். கர்ப்பமாக இருந்தபோது ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் அவருக்கு மகன் பிறந்தார். மகனுக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார். தற்போது தன்னுடைய மகனை வளர்ப்பதில் பிஸியாக இருக்கிறார். அதேசமயம் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தெரிகிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அமலா பால் தனது மகன் இலையை கொஞ்சும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களில் தனது மகனை வாஞ்சையோடு கொஞ்சுகிறார் அமலா பால். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட மகன் இவ்ளோ க்யூட்டா இருக்காரே. சுத்தி போடுங்க அமலா மேடம் என்று கமெண்ட்ஸ் செய்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











