ரவுண்டு புகைவிட்டு அசத்திய நடிகை அமலாபால்.. இது என்ன புது கெட்டப்பா இருக்கே!! என வியந்த ரசிகர்கள்!

கொச்சி : தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் அமலாபால் சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த நிலையில் தற்போது ரவுண்டு போய்விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அதோ அந்த பறவை போல, லஸ்ட் ஸ்டோரீஸ் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அமலாபால், லாக் டவுனில் வீட்டில் இருக்கும் நேரங்களில் புகைப்படங்களை எடுத்து அதை ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வாறு அமலாபால் பதிவிடும் பல புகைப்படங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தபோதிலும், தற்பொழுது சிகரெட் பிடித்தவாறு வாயிலிருந்து ரவுண்ட் ரவுண்ட் புகையை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய திரைப்படத்தில்

சர்ச்சைக்குரிய திரைப்படத்தில்

தமிழில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வெள்ளந்தியான மைனாவாக பரிச்சயமான அமலாபால், அதற்கு முன் சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய தமிழ் திரைப்படத்தில் நடித்து சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

முன்னணி கதாநாயகர்களுடன்

முன்னணி கதாநாயகர்களுடன்

இவ்வாறு இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்த நிலையில், மைனா திரைப்படம் இவருக்கு கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடித்து வந்தார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த அமலா பால் தெலுங்கிலும் மிகப் பிரபலமான நடிகர்களாக உள்ள அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்.

 லீட் ரோலில்

லீட் ரோலில்

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஆடை, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்பொழுது அதோ அந்த பறவை போல, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

தற்பொழுது சிகரெட்டுடன்

தற்பொழுது சிகரெட்டுடன்

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாகவே அள்ளி தெளித்து வரும் அமலாபால் சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களையும், தனது ஆண் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்த அமலாபால் தற்பொழுது சிகரெட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரவுண்ட் புகை விட்டவாறு

ரவுண்ட் புகை விட்டவாறு

இருட்டு அறையில் வித்தியாசமான உடையில் கையில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, வாயிலிருந்து ரவுண்ட் ரவுண்ட் புகை விட்டவாறு வெளியிட்டுள்ள இந்த ஏலியன் மோட் புகைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கும் நிலையில், இதற்கு முன் சரக்கு பாட்டில்களுடன் போஸ்ட் இப்போது சிகரெட்டா என ஒரு சிலரை கலாய்க்கவும் வைத்துள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X