‘ஆடை’யில் ஆடையில்லாமல் நடித்த அமலாபால்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
ஆடை படம் மூலம் அமலாபாலின் சம்பளம் உயர்ந்துள்ளது.
சென்னை: ஆடை படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியதைத் தொடர்ந்து அமலாபாலின் சம்பளம் திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது.
தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமாகி மைனா படம் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்த அவர், தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்பவர்.
இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த பந்தம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஆடை:
தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்த அமலாபால், அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார். இந்நிலையில் அவர், தற்போது ஆடை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆடை பர்ஸ்ட் லுக்:
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. நிர்வாண உடலில் வெறும் பேப்பரை மட்டும் சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்த அமலாபாலுக்கு இணையத்தில் செம டோஸ் விழுந்தது.

அதிரடி கவர்ச்சி:
அமலாபால் திடீரென கவர்ச்சியில் இவ்வளவு தாராளம் காட்ட என்ன காரணம் என்பது புரியாத புதிராக இருந்தது. கதையின் காரணமாகத் தான் அவ்வாறு நடித்ததாக அமலாபால் தெரிவித்திருந்தார். ஆனால் அது மட்டும் காரணமில்லை.

அதிரடியாக உயர்ந்த சம்பளம்:
தற்போது அந்த கவர்ச்சி படத்தின் பின்னணி தெரியவந்துள்ளது. அதாவது அமலாபால் தற்போது 60 முதல் 75 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இதனை ஆடை பட நிறுவனம் ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியிருக்கிறது. இதனால் தான் ஆடை படத்தில் அமலாபால் படுகவர்ச்சி காட்டியிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

ஒரு கோடி ரூபாய் சம்பளம்:
இனி நடிக்கும் படங்களிலும் தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக அமலாபால் நிர்ணயித்துள்ளார். இதனால் சக தயாரிப்பாளர்கள், ஆடை பட தயாரிப்பாளர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











