நிஜமாவே அமலாபாலுக்கு பெரிய மனசுதான்.. ஹீரோக்களை போல் ‘ஆடை’ ரிலீசுக்காக சம்பளத்தை விட்டு கொடுத்தார்!

தன் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து ஆடை பட ரிலீஸ் பிரச்சினையை முடித்து வைத்துள்ளார் அமலாபால்.

Recommended Video

Amala Paul Aadai:சர்ச்சையை கிளப்பிய புதிய Poster- வீடியோ

சென்னை: தன் ஆடை பட ரிலீஸ் பிரச்சினையை முடித்து வைப்பதற்காக தன் சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடிகை அமலாபால்.

'மேயாத மான்' பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாயகியை மையப்படுத்திய இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்சாரில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆரம்பம் முதலே சர்ச்சை:

ஆரம்பம் முதலே சர்ச்சை:

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதலே சர்ச்சைகள் ஆரம்பமாகி விட்டது. டாய்லெட் பேப்பரைச் சுற்றிக் கொண்டு, உடலில் காயங்களுடன் அமலாபால் போல்டாக போஸ் கொடுத்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. டிரெய்லரில் அதுவும் இல்லாமல், நிர்வாணமாக அமலாபால் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனாலேயே படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருந்தது.

ரிலீசில் சிக்கல்:

ரிலீசில் சிக்கல்:

இந்நிலையில் படம் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை ரிலீசாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை. இதனால் காலைக்காட்சி ரத்தானது. முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி:

பேச்சுவார்த்தை தோல்வி:

தயாரிப்பாளரின் முந்தைய பட பாக்கி குறித்து விநியோகிஸ்தர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஆடை ரிலீசில் பிரச்சினை நீடித்து வந்தது. அப்போது இந்தப் பிரச்சினையில் தலையிட்ட அமலாபால், தனது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை விட்டுக் கொடுக்க சம்மதித்தார்.

அமலாவுக்கு பாராட்டு:

அமலாவுக்கு பாராட்டு:

அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. பண விவகாரத்துக்கு தீர்வு கிடைத்ததால், ஆடை பட ரிலீசில் இருந்த சிக்கல் தீர்ந்தது. ஆடை படம் தமிழகம் முழுவதும் மாலைக் காட்சிகளுடன் வெளியானது. இதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் தங்கள் பட ரிலீசின் போது இடையில் தலையிட்டு, சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் ஹீரோயின் இப்படி செய்வது இது தான் முதன்முறை என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X