மம்மூட்டியின் பிரம்மயுகம்.. மேலாடையில்லாமல் மிரட்டும் ஹீரோயின் போஸ்டர்.. தீயாய் பரவுது!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் தான் பிரம்மயுகம். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டக் காத்திருக்கிறார் மம்மூட்டி. முதல் மற்றும் அவரது இரண்டாவது போஸ்டர்கள் மூலம் மம்மூட்டி மெர்சல் காட்டிய நிலையில், அந்த படத்தின் நாயகியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலாடை அணியாமல் பழங்குடியின பெண்ணாக நாயகி இருக்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார் மம்மூட்டி. கடைசியாக ஜோதிகாவுடன் இணைந்து ஓரினச்சேர்க்கை பற்றிய போல்டான படமாக வெளியான காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மகன் துல்கர் சல்மானை விட அதிகளவில் 70 வயதை கடந்த நிலையிலும் நடித்து வருகிறார் மம்மூட்டி.

வருஷத்துக்கு 4 படம்: கடந்த ஆண்டு மட்டும் மலையாள நடிகர் மம்மூட்டி 4 படங்களில் நடித்து வெளியிட்டுள்ளார். மம்மூட்டி கம்பெனி என தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திலேயே தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து மாஸ் காட்டுகிறார். 2022ல் 5 படத்தை ரிலீஸ் செய்திருந்தார். கடந்த ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோபர், காதல் தி கோர் மற்றும் கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட 4 படங்களை வெளியிட்டார்.
பேய் படத்திலும் ஆர்வம்: அனைத்து ஜானர் படங்களிலும் நடித்து வித்தியாசம் காட்டி வருகிறார் மம்மூட்டி. 2022ம் ஆண்டு வெளியான ரோர்ஷா திரைப்படம் ஹாரர் படமாக வெளியாகி இருந்தது. கடைசி வரை பல விஷயங்கள் அந்த படத்தில் புரியாத புதிராகவே இருக்கும். இந்நிலையில், அடுத்து உருவாகி வரும் பிரம்மயுகம் படமும் ஹாரர் கான்செப்ட் தான் என்கின்றனர்.
ஜெயிலரில் வில்லன் வாய்ப்பு: மம்மூட்டிக்கு ஜெயிலர் படத்தில் வில்லன் வாய்ப்பு கிடைக்க இருந்த நிலையில், மம்மூட்டியை அடிக்க முடியாது என்பதால் ரஜினி அதை தவிர்த்து விட்டார். விநாயகம் லுக்கிற்கு மம்மூட்டி இறங்கி நடிக்க மாட்டார் என கமெண்ட்டுகள் வெளியான நிலையில், பிரம்மயுகம் போஸ்டரை பார்த்து மிரண்டே போய் விட்டனர். அந்தளவுக்கு டெரரான வில்லனாக மம்மூட்டி போஸ் கொடுத்திருந்தார்.

மேலாடை அணியாத ஹீரோயின்: இந்நிலையில், தற்போது பிரம்மயுகம் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அமல்டா லிஸ் (Amalda Liz) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் பழங்குடியின பெண்ணாக தோற்றம் அளித்தது போல அமல்டா லிச் லுக் இருக்கிறது. ஆனால், அதை விட ஆச்சர்யப்படுத்தும் விதமாக மேலாடை அணியாமல் தனது கூந்தலை வைத்து முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கலர் டோன் எல்லாம் கருப்பு நிறத்தில் பயங்கரமாக இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் இந்த ஹாரர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











