அந்த வீடியோ தான் பிரச்சனை.. நான் ஒரு ’சதை பிண்டம்’ கிடையாது.. நெத்தியடி பதில் சொன்ன சாய் பல்லவி!

சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தீபாவளிக்கு வெளியாகும் அந்த படத்திற்கான புரமோஷனை ஆரம்பித்து விட்டார். யூடியூப் சேனல்களில் நடிகை சாய் பல்லவி அமரன் படம் குறித்தும் சமீபத்தில் கிளம்பிய சர்ச்சைகள் குறித்தும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

கிளாமராக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வர என்ன காரணம் என்பதற்கும் நடிகை சாய் பல்லவி தனது ஸ்டைலில் விளக்கம் கொடுத்துள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கதாபாத்திரம் வலுவான நிஜ கதாபாத்திரம் என்பதால் அந்த கேரக்டருக்காக பக்காவாக ரெடியாகி நடித்துள்ளார் சாய் பல்லவி.

amaran sai pallavi diwali 2024


ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏற்கனவே அமரன் படத்தில் இடம்பெற்ற “ஹே மின்னலே” பாடல் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்கள் மத்தியில் பிடித்துள்ளது. சாய் பல்லவி தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராமாயணம் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ தான் பிரச்சனை: பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக வெளிநாட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். அந்த நடனத்திற்கு கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடினால் தான் சரியாக இருக்கும் என நினைத்து ஆடியிருந்தேன். பிரேமம் படம் வெளியான சமயத்தில் பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட ஆரம்பித்து விட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என சாய் பல்லவி கூறியுள்ளார்.

சதை பிண்டம் கிடையாது: Am not a piece of meat - உடம்பை காட்டித்தான் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என நினைத்தேன். ரசிகர்களை இந்த லுக்கிலேயே என் மீது அவ்வளவு அன்பு செலுத்தும் போது அதையே ஃபாலோ செய்யலாமே என்று தான் நடித்து வருகிறேன் என்றார்.

வாய்ப்புகள் குறைய காரணம்?: அதனால் தான் உங்களுக்கு சில பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனதா? என்கிற கேள்வியை நீயா நானா கோபிநாத் எழுப்ப, அதனால் தான் வாய்ப்புகள் குறைகிறது என்றால், அதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. என் நடிப்புத் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் நடித்து விட்டு போகிறேன் என நெத்தியடி பதிலை நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடி: வரும் தீபாவளிக்கு உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்காவாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி. அமரன் திரைப்படம் ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு மிகப்பெரிய சமர்ப்பணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமாயண சீதை: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக ராமாயணம் படம் இந்தியில் உருவாகி வருகிறது. அதில், சீதாவாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். சமீபத்தில், பேட்டி ஒன்றில் பேசிய யஷ் முதலில் அந்த படத்தில் நானும் சாய் பல்லவியும் தான் கமிட் ஆனோம். சாய் பல்லவி தான் சீதாவாக நடிக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். ரன்பீர் அதன் பின்னர் தான் இணைந்தார் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X