Sai Pallavi: சாய் பல்லவி பிறந்தநாள்.. வாழ்த்துக்களை பகிர்ந்த அமரன், தண்டேல் டீம்ஸ்.. பூஜாவும் வாழ்த்து!

ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி தன்னுடைய 32வது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். தமிழில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சாய் பல்லவியின் பிறந்தநாளையொட்டி போஸ்டருன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

இதனிடையே நாக சைத்தன்யாவுடன் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவரது பிறந்தநாளுக்கு தண்டேல் படக்குழுவினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை, பூஜா கண்ணனும் instagram-ல் தன்னுடைய ஃபிரண்ட் என்று சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி: பிரேமம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படத்தில் மலர் டீச்சராக. தங்களுக்கு இது போன்ற ஒரு டீச்சர் கிடைக்க மாட்டார்களா என்று ரசிகர்களை ஏங்க வைத்தவர் சாய் பல்லவி. இந்த படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலிருந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் தனுஷ் உள்ளிட்டவர்களுடன் அவர் இணைந்து நடித்து ஏராளமான தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

அமரன் படத்தில் சாய் பல்லவி: தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட சூட்டிங் நடந்துவரும் சூழலில் விரைவில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்து படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றைய தினம் சாய் பல்லவி தன்னுடைய 32வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Amaran and thandel team wishes Sai pallavi on her birthday

சாய் பல்லவி பிறந்தநாள்: திரையில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து வரும் சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் சாய் பல்லவியின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாக சைத்தன்யாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் தண்டேல் பட குழுவினரும் சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் போடப்பட்ட சூழலில் தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Amaran and thandel team wishes Sai pallavi on her birthday

அக்காவிற்கு தங்கை வாழ்த்து: படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஒரு மீனவனின் காதல் குறித்த உண்மை கதையை மையமாக வைத்து தண்டேல் படம் உருவாகி வருவதாகவும் சாய் பல்லவிக்கு இந்த படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக நாக சைத்தன்யா தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சாய் பல்லவிக்கு படக்குழுவினர் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இதனிடையே சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை சாய் பல்லவிக்கு தெரிவித்துள்ளார். அவர் இல்லாமல் அடுத்த கட்ட பயணம் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ள பூஜா கண்ணன், சாய் பல்லவி தன்னுடைய தோழி என்று குறிப்பிட்டுள்ளார்.

Amaran and thandel team wishes Sai pallavi on her birthday

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X