ப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகை ப்ரியாங்கா சோப்ரா ஹாலிவுட் சென்ற இடத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் மீது காதலில் விழுந்தார். இருவரும் ஜோடியாக சேர்ந்து அமெரிக்காவில் ஊர் சுற்றினார்கள்.
இதையடுத்து முறைப்படி பெற்றோர் சம்மதத்துடன் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நிச்சயதார்த்தம்
என்ன தான் ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் இந்திய பாரம்பரிய முறைப்படி தான் தனது நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்பதில் ப்ரியங்கா சோப்ரா உறுதியாக இருந்தார். ப்ரியங்காவின் எண்ணத்திற்கு நிக் ஜோனஸும் மதிப்பு கொடுத்து தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார்.

நிக்
ப்ரியங்கா, நிக் ஜோனஸ் நிச்சயதார்த்தம் இந்திய முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டார் தவிர்த்து பாலிவுட் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

வாழ்த்து
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவி நிதா, மகள் இஷா ஆகியோருடன் வந்து ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸை வாழ்த்தினார். அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் ப்ரியங்கா சோப்ராவை கண்டிப்பாக பார்க்கலாம். இந்நிலையில் அம்பானிகள் ப்ரியங்கா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அர்பிதா
சல்மான் கானின் தங்கை அர்பிதாவும், ப்ரியங்கா சோப்ராவும் நெருங்கிய தோழிகள். ப்ரியங்கா சல்மான் கானின் பாரத் படத்தில் இருந்து வெளியேறிய போதிலும் அர்பிதா அவரின் நிச்சயதார்த்தத்திற்கு தனது கணவர் ஆயுஷ் சர்மாவுடன் வந்திருந்தார்.

சஞ்சய் லீலா பன்சாலி
ப்ரியங்கா, நிக் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

அம்மா
ப்ரியங்கா சோப்ராவின் அம்மா மது மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். நிச்சயதார்த்தம் நடந்த இடத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











