திருமண வாழ்க்கை முறிவுக்கு காரணம் என்ன?.. 80ஸ் ஃபேவரைட் அம்பிகா ஓபன் டாக்.. சூப்பரா சொல்லிட்டாங்க
சென்னை: கோலிவுட்டில் 80களில் கொடிகட்டி பறந்தவர் அம்பிகா. நடிகை ராதாவின் சகோதரியான அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடனும் ஜோடி சேர்ந்து ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மார்க்கெட் குறைந்த பிறகு கேரக்டர் ரோலுக்கு ஷிஃப்ட் ஆனார். அப்படி அவர் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், அவன் இவன் உள்ளிட்ட படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. இந்நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது பெர்சனல் பக்கங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த அம்பிகா தமிழில் சக்களத்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஏற்கனவே அவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவரும்கூட. முதல் படம் சரியாக போகாவிட்டாலும் இரண்டாவது படமாக அந்த 7 நாட்களில் நடித்தார். பாக்யராஜ் எழுதி, இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் பாக்யராஜ், அம்பிகா உள்ளிட்டோர் ஏற்றிருந்த ரோல்கள் எல்லாம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றன. அப்போதிருந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்றது.

தங்கையுடன் போட்டி: அம்பிகாவும், ராதாவும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள். இரண்டு பேருக்குமே பலத்த போட்டி நிலவியது. ராதா மட்டுமின்றி அம்பிகா காலத்தில் அவருக்கு போட்டிகள் எல்லாம் பலமாகவே இருந்தன. அதனை அவ்வளவு அசால்ட்டாக சமாளித்து கெத்து காண்பித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் எதை பற்றியும் யோசிக்காமல் கேரக்டர் ரோலுக்கு மாறினார். அப்படி அவர் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், வேல், மழை, அவன் இவன், ஜிகர்தண்டா என எக்கச்சக்க படங்களில் சிறந்த குணசித்திர நடிகையாக கலக்கினார்.
ட்ரெண்டாகும் பேட்டி: தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அம்பிகா ஹீரோயினாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "யூடியூபில் ஐந்து பேர் இருகிறார்கள். அவர்கள் ரொம்ப தவறானவர்கள். ரொம்ப தவறானவர்கள் என்றால் அவர்களுக்கு மனித பக்கமே இல்லை. ரொம்பவே வல்காரிட்டியோடு பேசுகிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல வேண்டும் என ஆசையாக இருக்கிறது. பரவாயில்லை நேரில் பார்க்கும்போது சொல்லிக்கொள்கிறேன்.
200 வயதில் ஒருவர்: ஒருவருக்கு 200 வயது இருக்கும். அவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் என்னை நல்லவள் என்று சொல்வதால் நான் நல்லவள் ஆகிவிடமாட்டேன். கெட்டவள் என சொல்வதால் கெட்டவள் ஆகிவிட மாட்டேன். வீட்டில் பிரச்னை இருப்பவர்கள் கெட்டதை பேசுவார்கள். அதேபோல் எனக்கு இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இல்லை. அதேசமயம் லேட்டஸ்ட்டாக யூடியூப் சேனல் ஆரம்பித்த பிறகு குறும்படங்கள் இயக்க ஆசை. எனது மண வாழ்க்கை முறிவுக்கு சினிமா ஒரு காரணம் இல்லை.
நாங்கள்தான் காரணம்: எந்தத் துறையில் இருந்தாலும் இரண்டு பேருக்குள்ளும் செட் ஆகவில்லை என்றால் அது முடிந்துவிடும். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பிரிய வேண்டும் என்றால் பிரிந்துதான் ஆக வேண்டும். அரசியலில் இருக்கும் இரண்டு பேர் பிரிந்தால் அரசியல் காரணமில்லை. அதேபோல் சினிமா காரணமில்லை. நானும் அந்த நபரும் மட்டும்தான் காரணம். நான் இந்தத் துறையில் ஒரு அளவுக்கு புத்திசாலித்தனதோடு நடந்திருக்கிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக, 1996ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அம்பிகா இரண்டே வருடங்கள் வாழ்ந்துவிட்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















