அமீர்-பாவனி ரெட்டி திருமணம்.. களைகட்டிய ஹல்தி கொண்டாட்டம்.. ஓடி வந்த பிரியங்கா!

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இந்த வாரம் திருமணம் நடைபெற்ற நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் வயப்பட்ட அமீர் மற்றும் பாவனிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

நடிகை பாவனி ரெட்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே, அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இவரின் தமிழ் பேசும் அழகுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளரா வந்தவர் தான் டான்ஸ் மாஸ்டர் அமீர்.

Ameer pavani Reddy wedding

பாவனி ரெட்டி: அமீர் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே பாவனியை காதலிப்பதாக கூறி அவரின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். ஆனால், நான் உன்னை விட பெரியவள் என காதலை ஏற்காமல் இருந்தார் பாவனி. இதையடுத்து, பிபி ஜோடி நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றனர். அந்த நிகழ்ச்சியின் போது தான், அமீர் அனைவர் முன்னம் காதலை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தான் பாவனி காதலை ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

Ameer pavani Reddy wedding

நாளை திருமணம்: இதையடுத்து, காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்து இருந்தனர். அதில், இந்த மூன்று வருடம் எப்படி போனது என்றே தெரியவில்லை, நமக்கு பிடித்தவர்களுடன் இருந்தால் மூன்று வருடம் கூட 3 நிமிடம் போல தான் இருக்கும். என கவிதை நடையில் பேசி திருமண தேதியை அறிவித்து இருந்தார்.நாளை இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இவர்களின் நெருங்கிய தோழியான பிரியங்காவிற்கு இந்த வாரம் திருமணம் நடைபெற்ற நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் கலந்து கொண்டு ஆட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

முதல் கணவர்: மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய பவானி ரெட்டி, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள், ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி ரெட்டி நடித்து வந்த நிலையில், தமிழ் சீரியலில் நடித்து வந்தார். அப்போது தான் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், பிரவீன் குமார், திருமணமான எட்டு மாதத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி ரெட்டி,கணவர் தற்கொலை செய்து கொண்டார். எங்கள் வாழ்க்கை நன்றாகத்தான் போய் கொண்டு இருந்தது. ஆனால், ஏன் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை என பல விஷயத்தில் அதில் பேசி இருந்தார்.

https://www.instagram.com/reel/DIoXy9KyW4m/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X