43 வயசுல விஜய் பட நடிகை செய்த வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!
43 வயசுல விஜய் பட நடிகை செய்த வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!
மும்பை: நடிகை அமீஷா பட்டேல் செய்த வேலை ஒன்று சமுக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை அமிஷா பட்டேல் நடிகர் விஜயுடன் புதிய கீதை படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் வசியக்காரி படத்தில் அவர் போட்ட ஆட்டம் பல ரசிகர்களையும் சுண்டி இழுத்தது.
பாலிவுட் நடிகையான அமிஷா பட்டேல் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமின்றி படத்தை தயார்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

போட்டோ
அண்மையில் பண மோசடி செய்த வழக்கில் ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார் அமிஷா பட்டேல்.

புஷ் அப்ஸ், தம்பள்ஸ்
இந்நிலையில் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் வெயிட் தூக்கியும் தம்ப்ள்ஸ் எடுத்தும் புஷ் அப்ஸ் செய்தும் அசத்தியிருக்கிறார் அமிஷா பட்டேல்.
ஏன் கவர்ச்சி?
43 வயதில் நடிகை அமிஷா பட்டேல் அரைகுறை ஆடையில் போட்டோக்களை வெளியிட்டு அதிர வைத்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சியை காட்டி என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்டு விளாசினர்.
கட்டுக்கோப்பு
இந்நிலையில் அமிஷா பட்டேலின் இந்த வொர்க் அவுட் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியிருக்கின்றனர். இந்த வயதிலும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள் என புகழ்ந்துள்ளனர்.
எதற்காக இவை?
அதே நேரத்தில் சிலர் இனிமேல் இதையெல்லாம் செய்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு படமும் இல்லை பாய் பிரன்டும் இல்லை, பின் எதற்கு இது என்று கேட்டு டிவிட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











