விஜய் பட நடிகையா இது? விதவிதமா பிகினியில் இப்படி மிரட்டுறாங்களே.. சம்மருக்கு சரியான சாய்ஸ்!
சென்னை: நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் இன்னொரு ஹீரோயினாக வசியக்காரியாக வந்து கலக்கிய பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் ஏகப்பட்ட பிகினி உடைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தற்போது ட்வீட் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
பாலிவுட் நடிகையான அமீஷா பட்டேல் இந்த சம்மரை எப்படி சமாளிப்பது என்கிற டிப்ஸையும் தனது ட்வீட் மூலம் ரசிகர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

அமீஷா பட்டேல்
ஹிரித்திக் ரோஷன் அறிமுகமான கஹோ நா பியார் ஹை படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக 2000ம் ஆண்டு அறிமுகமானவர் அமீஷா பட்டேல். அதே ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியான பத்ரி படத்தின் மூலமாக டோலிவுட்டிலும் அறிமுகமானார் அமீஷா பட்டேல். இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அமீஷா பட்டேல், தமிழில் 2003ம் ஆண்டு அறிமுகமானார்.

புதிய கீதை
அறிமுக இயக்குநர் கே.பி. ஜகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மீன் நடித்த புதிய கீதை படத்தில் ஜோ எனும் கதாபாத்திரத்தில் செம ஹாட்டாக கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார் அமீஷா பட்டேல். அதன் பிறகு தமிழ் படங்களிலேயே அமீஷா பட்டேல் நடிக்கவில்லை. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

வித விதமான பிகினியில்
இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வித விதமான பிகினி உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பாக ஒரே ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். அமீஷா பட்டேல் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியொரு கவர்ச்சி ட்வீட் போட்டு இருப்பது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சம்மர் டிப்ஸ்
மேலும், அந்த போட்டோவுக்கு கேப்ஷனாக சம்மரில் வெயில் சுட்டெரித்தால், நீச்சல் குளத்துக்கோ, பீச்சுக்கோ போய்விடுங்க என கூலான சம்மர் டிப்ஸையும் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். 45 வயதை கடந்துள்ள அமீஷா பட்டேல் இன்னமும் இன்ஸ்டாகிராமில் படு கிளாமராக போட்டோக்களை போட்டுத் தெறிக்கவிட்டு வருகிறார்.

5 படங்கள்
கடைசியாக 2018ம் ஆண்டு பாலாஜி சூப்பர்ஹிட் எனும் இந்தி படத்தில் நடித்த இவர், நடிப்பில் டெஸி மேஜிக், டபா டெரே ஜல்வா, தி கிரேட் இந்தியன் கேசினோ, மிஸ்டரி ஆஃப் டாட்டூ மற்றும் கதார் 2 என மொத்தம் 5 படங்கள் உருவாகி வருகின்றன. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











