அமெரிக்காவுக்கு ஓட மாட்டேன், பங்குகளை விற்க மாட்டேன்.. ப்ரீத்தி ஜிந்தா

By Sudha

மும்பை: இணை நிறுவனர் நெஸ் வாடியா விவகாரம் பரபரப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ள போதிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் தனக்குள்ள பங்குகளை விற்கப் போவதில்லை என்று நடிகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.

நெஸ் வாடியா உள்ளிட்டோருடன் இணைந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நிர்வகித்து வருகிறார் ப்ரத்தி ஜிந்தா. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது பஞ்சாப் அணி அபாரமாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

போட்டிகள் முடிந்த நிலையில் திடீரென நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கூறி சலசலப்பை ஏற்படுத்தி விட்டார் ப்ரீத்தி ஜிந்தா. இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தனது அணியில் தனக்குள்ள பங்குகளை ப்ரீத்தி விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை நிராகரித்துள்ளார் ப்ரீத்தி. இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தி.

எல்லோருக்கும் பெரிய நன்றி

எல்லோருக்கும் பெரிய நன்றி

எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எனது பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊடகங்களின் ஊகங்கள்…

ஊடகங்களின் ஊகங்கள்…

அதேசமயம் எனது அணி குறித்த ஊடகங்களின் ஊகங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றன. நான் எனது பங்குகளை விற்கப் போவதில்லை. அப்படி வரும் செய்திகள் தவறு.

அமெரிக்காவுக்கும் ஓட மாட்டேன்

அமெரிக்காவுக்கும் ஓட மாட்டேன்

அதேபோல நான் அமெரிக்காவில் போய் செட்டிலாகப் போவதாகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். அப்படி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை.

இனிமேல் அப்படி எழுதாதீர்கள்

இனிமேல் அப்படி எழுதாதீர்கள்

தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் எழுதுகிறார்கள். இனிமேல் அப்படி செய்யாதீர்கள்.

இதை விட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு பாஸ்

இதை விட முக்கியமான விஷயம் நிறைய இருக்கு பாஸ்

இந்தியாவில் இதை விட முக்கியமான பிரச்சினைகள், விஷயங்கள் நிறைய உள்ளன. அதில் மீடியாக்கள் கவனம் செலுத்த வேண்டும். இதை விட முக்கியமான செய்திகளுக்கேற்ற சமாச்சாரங்கள் நிறைய உள்ளன என்று கூறியுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா.

தாதாவின் மிரட்டல்…

தாதாவின் மிரட்டல்…

நெஸ் வாடியா விவகாரத்துக்கு மத்தியில் ரவி பூஜாரி என்ற ஒரு நிழல் உலக தாதா ப்ரீத்திக்கு ஆதரவாக, நெஸ் வாடியாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பு கிளம்பியது. ப்ரீத்திக்கு தொந்தரவு தரக் கூடாது என்று அந்த தாதா மிரட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பழைய உறவு.. கசந்த நட்பு.. தொழிலில் சிக்கல்

பழைய உறவு.. கசந்த நட்பு.. தொழிலில் சிக்கல்

நெஸ் வாடியாவும், ப்ரீத்தியும் முன்னாள் காதலர்கள் ஆவர். 5 ஆண்டு காதலுக்குப் பின்னர் 2009ல் இருவரும் பிரிந்தநர். ஆனால் தொழில் முறையில் நட்பாக இருந்து வந்தனர். தற்போது அதுவும் கசந்து போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X