விஜய், திரிஷாவுக்கு திருமணம் முடிந்தது.. குண்டை தூக்கிப்போடும் பிரபலம்.. இது என்னங்க புதுசா இருக்கு?
சென்னை: சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தவுடனேயே; திரிஷாவுடன் விஜய் சேர்ந்து ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். அவரது அந்த வருகை பல கேள்விகளை உருவாக்க வழி வகுத்தது. அச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேருமே இதுவரை அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் இன்னும் பலரும் கடுமையான எதிர்வினைகளை கொடுத்துவருகிறார்கள். இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய்யை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் சங்கீதா. தமிழீழத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் முதலில் விஜய்யின் ரசிகையாக இருந்து பிறகு மனைவியாக மாறினார். இரண்டு பேரும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்தார்கள். புரிதலோடு வாழ்க்கையை நகர்த்தினார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் அவர்கள் இரண்டு பேருக்குமிடையே கடந்த சில வருடங்களாக பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அதை நம்புவதற்கு பெரும்பாலானோர் தயாராக இல்லை.

உறுதி செய்த சங்கீதா: அதேசமயம் விஜய் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் சமீபமாக வராமல் இருந்தார் சங்கீதா. இதனால் நெருப்பு இல்லாமல் புகையாது என குரல்கள் கேட்டன. இப்படிப்பட்ட நிலைமையில்தான் திடீரென சங்கீதாவின் விவாகரத்து மனு பொதுவெளிக்கு தெரியவந்தது. அதில், 'தனது கணவருக்கும், நடிகை ஒருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை தட்டி கேட்டதன் காரணமாக என்னை சுதந்திரமாக நடமாட விடவில்லை. நிதி சுதந்திரத்தையும் விஜய் தடுத்தார்' என்றெல்லாம் கூறியிருந்தார்.
இத்தனை வருடங்களில் முதன்முறையாக: அந்த நடிகை திரிஷாவாதான் இருக்கும் என ஒருதரப்பினர் சந்தேகித்தார்கள். சூழல் இப்படி இருக்க விஜய்யும், திரிஷாவும் இதுவரை ஐந்து படங்களில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். 20 வருடங்களாக நட்பில் இருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாமல் இந்த மாதத்தில் விஜய்யும், திரிஷாவும் மேட்சிங்காக ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு ஜோடியாக ஏஜிஎஸ் வீட்டு திருமணத்திலும் கலந்துகொண்டு பரபரப்பை கிளப்பினார்கள். அது பெரிய விவாதமாக மாறியது.
அமைதி காக்கும் திரிஷா: இரண்டு பேரும் அப்படி வந்ததை விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் வரவேற்கவில்லை. அதேபோல் பொதுவானவர்களும் விஜய்க்கு எதிரான கருத்தையே பதிவு செய்தார்கள். அதேசமயம் இவ்விஷயம் தொடர்பாக திரிஷா தொடர்ந்து அமைதி காத்துவருகிறார். போதாக்குறைக்கு இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள். அப்படி உருவாகும் ரீல்ஸ்களுக்கு திரிஷாவின் தாய் உமாவும் சும்மா இருக்க முடியாமல் லைக்கை தட்டிவிட்டு பரபரப்புக்கு மைலேஜை ஏற்றிவிடுவது குறிப்பிடத்தக்கது.
சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "விஜய்யை திரிஷா இருபது வருடங்களாக க்ரூம் செய்திருக்கிறார். திரிஷா நிற்க சொன்னால் விஜய் நிற்பார். நாய்க்குட்டி போல் இருக்கிறார். தினமும் திரிஷாவிடம் அவர் என்னை திருமணம் செய்துகொள் என விஜய் சொல்கிறார். பல நடிகர்கள் தங்களை திருமணம் செய்துகொள்ள சொல்லும் பெண்களை பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு அழைத்து சென்று குங்குமம் வைத்துவிடுவார்கள். நான்கு கிராமில் ஏதோ ஒரு நகையை மாட்டிவிடுவார்கள். நிறைய பேர் இப்படி செய்திருக்கிறார்கள்.
திருமணம் முடிந்தது: அப்படி செய்வதால் சில வருடங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருப்பார்கள். அதேமாதிரி விஜய்க்கும், திரிஷாவுக்கும் சர்ச்சில், மசூதியில், கோயிலில் நடந்திருக்கிறது. நீ ஏதாவது செய்தால் நான் மோடி கப்பலில் கால் வைப்பேன் இல்லையென்றால் உதயநிதி கப்பலில் கால் வைப்பேன் என விஜய் கூறுவார்" என்றார். சுசித்ராவின் இந்தப் பேட்டி புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து இதே மாதிரி பேசிவரும் அவர் மீது சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications















