திரிஷாவுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. ஜாலியாக இருக்காங்க.. இன்ஸ்டாகிராமில் சொல்லியிருப்பதை பாருங்க

சென்னை: நடிகை திரிஷா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறார். சங்கீதா முதலில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை இவர்தான் என கருத்து எழுந்தது. அதனையடுத்து தயாரிப்பாளரின் மகன் திருமணத்துக்கு ஒரே நிறத்திலான உடையில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக வந்தார்கள். அது மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் திரிஷாவுக்கு எதிரான கருத்தை சோஷியல் மீடியாவில் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. அவருக்கு 42 வயது ஆகிறது. இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்துவருகிறார். ஒருமுறை வருண் மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. அதனைத் தொடர்ந்து ராணா டகுபதியுடன் காதல் மலர்ந்ததாகவும்; அதற்கு ராணாவின் குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளாததால் அந்தக் காதல் பாதியில் முடிந்ததாக ஒரு பேச்சு ஓடியது நினைவுகூரத்தக்கது.

Amid Vijay Divorce Row Trisha s Weekend Post Triggers Fans Reactions
Photo Credit:

விஜய் -சங்கீதா பஞ்சாயத்தில் திரிஷா: இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சில வாரங்களுக்கு முன்பு விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,'ஒரு நடிகை தனது கணவரோடு வெளிநாடுகளுக்கு சென்ற ஃபோட்டோக்களை பகிர்ந்தார்; நடிகையுடன் என் கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது' என தெரிவித்திருந்தார். விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை திரிஷாதான் சில காலத்துக்கு முன்பு பகிர்ந்துகொண்டிருந்தார். எனவே சங்கீதா சொன்ன நடிகை திரிஷாதானோ என சந்தேகப்பட ஆரம்பித்தார்கள்.

ஒன்றாக வந்த விஜய் - திரிஷா: ஆனால் எதுவும் உறுதியாக தெரியாத வரை இதில் திரிஷாவின் பெயரை இழுப்பது அநாகரீகம் என கருதி அவரை ஓபனாக பேசாமல் அரசல் புரசலாக பெயரை குறிப்பிடாமல் பேசிவந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக சில நாட்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஒருவரின் மகன் திருமணத்துக்கு ஒரே கலர் டோனில் உடை அணிந்து ஒரே காரில் விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக வந்தார்கள். அது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரிஷாவை வெளுக்கும் விஜய் ரசிகர்கள்: முக்கியமாக விஜய்யின் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் பெரிய ஷாக்கை இது கொடுத்திருக்கிறது. இவருக்காக நாங்கள் களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்; இவரோ; இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான திரிஷாவோடு ஜோடி போட்டு வருகிறாரே என புலம்புகிறார்கள். மேலும், விஜய்யை விட்டு விலகிவிடுங்கள் என்றும் திரிஷாவுக்கு சோஷியல் மீடியாவில் சில விஜய் ரசிகர்கள் வலியுறுத்தவும் செய்திருக்கிறார்கள். சமீப வருடங்களாக பெரிய சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த திரிஷா இப்போது மீண்டும் சிக்கியிருக்கிறார்.

Amid Vijay Divorce Row Trisha s Weekend Post Triggers Fans Reactions
Photo Credit:

திரிஷாவின் அமைதி: விஜய்யோடு ஒன்றாக திரிஷா சென்றதால் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆனால் திரிஷாவோ அதையெல்லாம் துளியும் கண்டுகொள்ளவில்லை. திருமணத்துக்கு சென்று வந்த அன்னைக்கே ரொம்பவே கூலாக ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தோழர்கள் மற்றும் தோழிகளுடன் வைப் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் இப்போது புதிய போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார். ஃபிங்கர் சிப்ஸை ஃபோட்டோ எடுத்து போட்டு, 'வீக் எண்ட் மோட் ஆன்' என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இங்கே வீக் டே எது; வீக் எண்ட் எதுவென தெரியாமல் பிரச்னையை சமாளித்துக்கொண்டிருக்கிறோம்; உங்களுக்கு வீக் எண்ட் மோட் ஆன் ஆகிவிட்டதோ என கடுப்பில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X