திரிஷாவை விட்டு விடு விஜய் ப்ளீஸ்.. சங்கீதா அறைந்தால் வாங்கிக்கோ.. தோழியே இப்படி சொல்லிட்டாங்களே ப்பா
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா மனுத்தாக்கல் செய்த சில நாட்களிலேயே; நடிகை திரிஷாவுடன் திருமண விழாவுக்கு விஜய் ஜோடியாக வந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பேருக்குமிடையே இருப்பது என்னவென்பது குறித்து அனைவருமே பேச்சு பொருளாக்கிவிட்டார்கள். இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா இந்த விவகாரம் பற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பல விஷயங்களை ஓபனாக போட்டு உடைத்திருக்கிறார்.
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், என்னை சுதந்திரமாக நடமாடவில்லை, உளவியல் ரீதியான பிரச்னையில் இருக்கிறார், கடந்த ஐந்து வருடங்களாகவே என்னை அவர் பிரிந்துதான் வாழ்கிறார்'இவை உட்பட இன்னும் ஏராளமான விஷயங்களை விஜய் குறித்து கூறி அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் சங்கீதா. சில நாட்களுக்கு முன்பு இந்த பரபரப்பான விஷயம் நடந்தது. அதுகுறித்த பேச்சுக்கள் ஓய்வதற்கு உள்ளாகவே விஜய்யின் இன்னொரு செயல் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரிஷாவுடன் வருகை: தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் சுரேஷின் மகன் திருமணத்துக்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் திரிஷாவுடன் ஜோடியாக வந்தார் விஜய். சங்கீதா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கையில்; மனுவில் குறிப்பிடப்பட்ட நடிகை திரிஷாதானா என பலர் சந்தேகிக்கும் சூழலில்; திரிஷாவுடன் அவர் வந்தது கண்டிப்பாக அவருக்கான இமேஜை மேற்கொண்டு உடைத்து போட்டிருக்கிறது என்றே தவெகவினரும் சொல்கிறார்கள். பலரும் இனியும் கட்சியில் இருந்துகொண்டு விஜய்க்கு முட்டு கொடுக்க முடியாது என தங்களது அதிரடி முடிவையும் அறிவிக்கிறார்கள்.
எப்படி செய்யலாம் இப்படி?: விஜய் மீது சங்கீதா குற்றச்சாட்டுக்களை வைத்தபோது; திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் எங்கள் அண்ணாவுக்கு சங்கீதா அண்ணி துரோகம் செய்துவிட்டார் என ஆரம்பித்து; அவரை தரக்குறைவாக பேசவும் செய்தார்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ். அதற்கு விஜய் சைலெண்ட்டாகவே இருந்தார். ஆனால் இப்போது சைலெண்ட்டாக அவர் செய்திருக்கும் செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். தேர்தல் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை என்பதை இந்த செயல்பாடு உணர்த்திவிட்டது என்பதும் பெரும்பாலானோரின் கருத்து.
சுசித்ரா பேட்டி: இந்நிலையில் விஜய் - சங்கீதா விவகாரம் ஆரம்பித்ததிலிருந்தே திரிஷாவை சகட்டுமேனிக்கு விளாசுகிறார் பின்னணி பாடகி சுசித்ரா. விஜய்யுடன் நட்பு உண்டு. அதன் காரணமகா உரிமையில் பேசுகிறேன் என சொல்கிறார். அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த லேட்டஸ்ட் பேட்டியில், "விஜய் திரிஷாவை விட்டுவிடு. ப்ளீஸ் விஜய். அவள் ஒன்றும் உலக அழகியெல்லாம் இல்லை. உனக்கு அவள் வொர்த்தே இல்லை. அவள் ரொம்ப தரங்கெட்ட நபர்.
அரசியலுக்கு வருவதற்குதான் திரிஷா காத்திருக்கிறார். விஜய் வென்றால் ஒரு பிளான் வைத்திருக்கிறார். தோற்றால் இன்னொரு பிளான் வைத்திருக்கிறார். விஜய்க்கு யாரும் வாக்களிக்கக்கூடாது. அதுதான் அவருக்கு செய்யும் நல்லது.
ஜேசன் சஞ்சய்க்கு கோபம் இருக்கும்: திரிஷா நினைத்தால் திரிஷாவுடனான விஜய் உறவை ஜேசன் சஞ்சய் ஏற்றுக்கொள்ளவில்லை. கோபம் இருக்கும்தானே. திரிஷா என்று இல்லை வேறு யாரையும் சங்கீதா இடத்தில் அவர்களால் வைத்து பார்க்க முடியாதுதானே. அதனால் அவர்கள் அம்மா பக்கம்தான் நிற்பார்கள். அது நியாயம்தானே. சங்கீதாவை சந்தித்து விஜய் பேச வேண்டும். சங்கீதா அறைந்தாலும் வாங்கிக்கொள்ள வேண்டும். இரண்டு பேரும் திருமணமான புதிதில் அவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications















