3 மணி நேர பிரசவ வலியை தாங்கிய ஐஸ்வர்யா ராய்.. புகழ்ந்த மாமனார் அமிதாப் பச்சன்!
சென்னை: எப்போதும் தனது மருமகள் ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளும் அமிதாப் பச்சன், தற்போது ஐஸ்வர்யாவின் பிரசவம் குறித்து பேசி உள்ளார். அதில், திடீரென ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவ வலி ஏற்பட்டது, அந்த வலி 3 மணி நேரமாக நீடித்த போதும் அவர் வலி நிவாரணியும் எடுத்துக்கொள்ளவில்லை என புகழ்ந்து தள்ளி உள்ளார்.
இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மவுசு இன்றும் உச்சத்தில்தான் உள்ளது. இவருக்கு பின் எத்தனையோ உலக அழகிகள் வந்தாலும், இன்னும் ஐஸ்வர்யா ராய் தான் டாப்பில் இருக்கிறார். 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராயை, அப்படியே தட்டி தூக்கி வந்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.

ஐஸ்வர்யா ராய்: மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த முகமான மாறினார். இந்த படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி தான்
அடுத்தடுத்த படத்தில்: அதன் பின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முன்னணி நடிகர்களான தபு, மம்முட்டி, அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்தார் ஐஸ்வர்யா ராய். எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த ஐஸ்வர்யா, மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஊமைப்பெண் மற்றும் நந்தினி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வசூலை அள்ளியது.
காதல் திருமணம்: இவர், பாலிவுட் பாட்ஷா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சினிமா நிகழ்ச்சி, பிரபலங்களின் கல்யாணம், விருது வழங்கும் விழா என எதுவாக இருந்தாலும் தனது மகளுடனே வருகிறார் ஐஸ்வர்யா ராய். அம்மாவைப் போலவே ஆராதனாவும் அனைவரும் பார்த்து வியக்கும் அளவிற்கு இருக்கிறார்.
பிரசவ வலி: இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், தனது மருமகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றில் புகழ்ந்து பேசி உள்ளார். அதில், ஆராத்யா பிறந்த போது ஐஸ்வர்யா எந்தவிதமான வலி நிவாரணியையும் எடுத்துக்கொள்ளவில்லை. பிரசவ வலி இரண்டு முதல் மூன்று மணி நேரம் இருந்தது அப்போது அந்த வலியை தாங்கிக்கொண்டார். மேலும், அறுவை சிகிச்சை தேவையில்லை இயற்கை முறை பிரசவத்தையே ஐஸ்வர்யா விரும்பினார் என்று அந்த பேட்டியில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











