ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்தா?..மிகப்பெரிய முற்றுப்புள்ளியை வைத்த அமிதாப் பச்சன்
மும்பை: நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களது திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவின. அதனை அவர்களது செயல்பாடுகளும், பேட்டிகளும் இல்லை என்பதை உணர்த்தின.
ஐஸ்வர்யா ராய் என்றாலே உலக அழகி என்றுதான் முதலில் எல்லோருக்கும் தோன்றும். உலக அழகி பட்டம் வென்று புகழின் உச்சியில் இருந்த அவர் இருவர் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கியிருந்த அந்தப் படத்தை பார்த்த ரசிகர்களும், இயக்குநர்களும் ஐஸ்வர்யாவிடம் அழகு மட்டுமில்லை திறமையும் கொட்டி கிடக்கிறது என்று உணர்ந்துகொண்டனர். அதற்கு பிறகு பல படங்களில் அவர் ஹீரோயினாக புக் செய்யப்பட்டார். கிடைத்த வாய்ப்புகளை ஐஸ்வர்யாவும் பயன்படுத்திக்கொண்டார்.

பிஸி நடிகை: தமிழில் அவர் அறிமுகமானாலும் ஹிந்தியில் அவரது கொடி உயர பறந்தது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய்தான். ஏனெனில் தமிழைவிடவும் ஹிந்தியில் அவர் அதிக கவனம் செலுத்தினார். அவ்வப்போது தமிழிலும் நடித்தார். தமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான் கானை தீவிரமாக காதலித்துவந்தார். சில வருடங்கள் ஜோடி புறாக்களாக இருவரும் இருந்த சூழலில் சில காரணங்களால் காதல் முறிந்தது.
திருமணம்: நிலைமை இப்படி இருக்க நடிகர் அபிஷேக் பச்சனை காதலிக்க ஆரம்பித்தார் ஐஸ். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேரும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் அவர்கள் காதலோடும், விட்டுக்கொடுத்தும் தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர்களை சுற்றி ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
விவாகரத்து: அதாவது அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஓவர் அதிகாரம் செய்கிறார். அதனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை பிரியப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அப்படி எதுவுமே இல்லை; தங்களை பற்றி இஷ்டத்துக்கு கதை சொல்கிறார்கள் என்று அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் ஓபனாகவே பேசியிருந்தார். அதுமட்டுமின்றி ஜெயா பச்சனும் தான் ஐஸ்வர்யா மீது எந்த அதிகாரமும் செலுத்திவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியிருந்தார்.
உறுதி செய்த ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க சில நிகழ்ச்சிகளில் மகள், கணவருடன் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இதனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வந்தது. இருந்தாலும் திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் விவாகரத்து கிசுகிசு கிளம்பியது. அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்தனர்.
அமிதாப் பச்சன் பேட்டி: இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் குறித்து அவரது மாமனாரும், நடிகருமான அமிதாப் பச்சன் ஒரு பேட்டியில் பேசுகையில், "ஆராத்யா பிறந்தபோது எந்த வலி நிவாரணியும் எடுத்துக்கொள்ளாமல் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் பிரசவ வலியை ஐஸ்வர்யா ராய் தாங்கிக்கொண்டார். அதேபோல் அறுவை சிகிச்சைக்கு பதிலாக இயற்கை பிரசவத்தையே தேர்ந்தெடுத்தார். அதனை நினைத்து எனக்கு பெருமைதான்" என்றார். இதன் மூலம் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











