எனக்கு கல்யாணமா.. குக் வித் கோமாளி புகழ் அம்மு அபிராமி சொன்ன பதிலை பாருங்க!

சென்னை : நடிகை அம்மு அபிராமி, தானா சேர்ந்த கூட்டம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சிறப்பான அறிமுகத்தை தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கொடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தையடுத்து தற்போது 6 படங்களில் கமிட்டாகியுள்ளார் அம்மு அபிராமி.

நடிகை அம்மு அபிராமி

நடிகை அம்மு அபிராமி

நடிகை அம்மு அபிராமி தானா சேர்ந்த கூட்டம், அசுரன், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிரட்டியவர். இந்தப் படங்களில் அசுரன் மற்றும் ராட்சசன் படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்துவந்த இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

3வது இடத்தில் அம்மு அபிராமி

3வது இடத்தில் அம்மு அபிராமி

இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக அமைந்துள்ள நிலையில், தற்போது 3வது சீசனையும் சிறப்பாக நிறைவு செய்துள்ளது. இதில் ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தையும் தர்ஷன் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் கைப்பற்றினர்.

அம்மு அப்பா மகிழ்ச்சி

அம்மு அப்பா மகிழ்ச்சி

சமையல் ரூம் பக்கமே வராத தன்னுடைய மகள், இந்த அளவிற்கு குக்கிங் எக்ஸ்பர்ட்டாக மாறியது குறித்து அம்மு அபிராமியின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள அம்மு அபிராமி பட வாய்ப்புகளையும் அதிகமாக பெற்று வருகிறார்.

6 படங்களில் கமிட்டான அம்மு

6 படங்களில் கமிட்டான அம்மு

தற்போது 6 படங்களில் இவர் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அம்மு அபிராமி. கண்களை உறுத்தாத காஸ்ட்யூம்களில் இவர் பதிவிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களின் பேவரைட். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறார் அம்மு.

கேள்வி -பதில் நிகழ்ச்சி

கேள்வி -பதில் நிகழ்ச்சி

இந்நிலையில் இதுபோன்ற சமீபத்தில் கேள்வி -பதில் நிகழ்ச்சியில் பேசிய அம்மு அபிராமி, ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். தொடர்ந்து அவரது திருமணம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் தெளிவாகவே அம்மு அபிராமி பதிலளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

திருமணம் குறித்து யோசிக்கவில்லை

திருமணம் குறித்து யோசிக்கவில்லை

தனக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது என்றும் அதனால் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது படவாய்ப்புகள் அதிகமாக வரும் நிலையில், கேரியரில் ஜெயிக்க வேண்டியது சாதிக்க வேண்டியது அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிப்பாக திருமணம் செய்வேன்

கண்டிப்பாக திருமணம் செய்வேன்

தான் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் அதற்கான நேரம் வரும்போது அது கட்டாயம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். அபிராமி அதிகமாக பேச மாட்டார் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் அதை உடைத்தார். இந்நிலையில் தற்போது திருமணம் குறித்த அவரது பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X