»   »  அமோக அமோகா! அமோகாவை ஞாபகம் இருக்கிறதா? ஸாரி, மறந்து விட்டேன் என்கிறீர்களா, அதற்காகத்தான் மீண்டும் அமோகா தமிழ்ப்படங்களில் பிரவேசிக்க உள்ளார்.ஜேஜே படத்தில் குடும்பக் குத்துவிளக்கு போல வந்து போனவர் அமோகா. இந்த வங்காளக் கிளி சிறிது இடைவெளிக்குப் பிறகுதமிழ்ப் படங்களில் தலை காட்ட உள்ளது. அப்படிக் கூறுவதை விட தனது உடல் வனப்பைக் காட்ட வருகிறது என்றார் சாலப்பொருத்தமாக இருக்கும்.ஹீரோயினாக வந்து போன அமோகாவுக்கு இப்போது இந்தியத் திரையுலகில் எங்கேயும் மார்க்கெட் இல்லை. பார்த்தார்,அம்மணி, கவர்ச்சிக்குத் தாவினார். ராம் கோபால் வர்மாவின் இந்திப் படத்தில் படு கிளாமராக நடித்து பெரும் புரட்சியையேஏற்படுத்தியுள்ளார்.ஜேஜே படத்தில் பார்த்த நம்ம அமோகாவா என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில் புகுந்துவிளையாடியுள்ளார். விடுவார்களாக கோலிவுட் ஆசாமிகள், ஓடிப் போய் அவரைப் புக் செய்து விட்டார்கள், ஹீரோயினாக நடிக்கஅல்ல, குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போடுவதற்கு!

அமோக அமோகா! அமோகாவை ஞாபகம் இருக்கிறதா? ஸாரி, மறந்து விட்டேன் என்கிறீர்களா, அதற்காகத்தான் மீண்டும் அமோகா தமிழ்ப்படங்களில் பிரவேசிக்க உள்ளார்.ஜேஜே படத்தில் குடும்பக் குத்துவிளக்கு போல வந்து போனவர் அமோகா. இந்த வங்காளக் கிளி சிறிது இடைவெளிக்குப் பிறகுதமிழ்ப் படங்களில் தலை காட்ட உள்ளது. அப்படிக் கூறுவதை விட தனது உடல் வனப்பைக் காட்ட வருகிறது என்றார் சாலப்பொருத்தமாக இருக்கும்.ஹீரோயினாக வந்து போன அமோகாவுக்கு இப்போது இந்தியத் திரையுலகில் எங்கேயும் மார்க்கெட் இல்லை. பார்த்தார்,அம்மணி, கவர்ச்சிக்குத் தாவினார். ராம் கோபால் வர்மாவின் இந்திப் படத்தில் படு கிளாமராக நடித்து பெரும் புரட்சியையேஏற்படுத்தியுள்ளார்.ஜேஜே படத்தில் பார்த்த நம்ம அமோகாவா என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில் புகுந்துவிளையாடியுள்ளார். விடுவார்களாக கோலிவுட் ஆசாமிகள், ஓடிப் போய் அவரைப் புக் செய்து விட்டார்கள், ஹீரோயினாக நடிக்கஅல்ல, குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போடுவதற்கு!

Subscribe to Oneindia Tamil

அமோகாவை ஞாபகம் இருக்கிறதா? ஸாரி, மறந்து விட்டேன் என்கிறீர்களா, அதற்காகத்தான் மீண்டும் அமோகா தமிழ்ப்படங்களில் பிரவேசிக்க உள்ளார்.

ஜேஜே படத்தில் குடும்பக் குத்துவிளக்கு போல வந்து போனவர் அமோகா. இந்த வங்காளக் கிளி சிறிது இடைவெளிக்குப் பிறகுதமிழ்ப் படங்களில் தலை காட்ட உள்ளது. அப்படிக் கூறுவதை விட தனது உடல் வனப்பைக் காட்ட வருகிறது என்றார் சாலப்பொருத்தமாக இருக்கும்.

ஹீரோயினாக வந்து போன அமோகாவுக்கு இப்போது இந்தியத் திரையுலகில் எங்கேயும் மார்க்கெட் இல்லை. பார்த்தார்,அம்மணி, கவர்ச்சிக்குத் தாவினார். ராம் கோபால் வர்மாவின் இந்திப் படத்தில் படு கிளாமராக நடித்து பெரும் புரட்சியையேஏற்படுத்தியுள்ளார்.

ஜேஜே படத்தில் பார்த்த நம்ம அமோகாவா என்று தமிழ் ரசிகர்கள் வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு கிளாமரில் புகுந்துவிளையாடியுள்ளார். விடுவார்களாக கோலிவுட் ஆசாமிகள், ஓடிப் போய் அவரைப் புக் செய்து விட்டார்கள், ஹீரோயினாக நடிக்கஅல்ல, குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போடுவதற்கு!


தமிழில் ஹீரோயின் ஆகி போண்டியாகி காணாமல் போன அமோகா மீண்டும் அதே தமிழ் திரையுலகில் சிங்கிள் பாட்டுக்குஆட்டம் போடும் ஆட்டக்காரியாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விஜய்யின் ஆதி படத்தில் அமோகா ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடவுள்ளார். அதேபோல, அஜீத் நடிக்கும் பரமசிவன் படத்திலும்அமோகாவின் அமோகமான ஆட்டம் உண்டாம். இந்த இரண்டு படத்திலும் தனது ஆட்டத்திற்குக் கிடைக்கும் ரெஸ்பான்ஸைப்பார்த்து தொடர்ந்து குத்துப் பாட்டுக்கு ஆடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவுள்ளாராம் அமோகா.

தமிழ் திரையுலகில் இன்று குத்துப் பாட்டுக்களின் பொற்காலமாக இருப்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு ஒரு கலக்கு கலக்கஅம்மணி முடிவு செய்து விட்டார். அதேசமயம், நல்ல வாய்ப்புகள் வந்தால் ஹீரோயினாகவும் நடிக்கத் தயார், கிளாமர் பற்றிக்கவலையேப் பட வேண்டாம் என்பதையும் தனது புதிய புகைப்பட ஆல்பம் மூலம் கோலிவுட்காரர்களுக்கு தெள்ளத் தெளிவாகபுரிய வைத்தும் வருகிறாராம் அமோகா.

ஆஹா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil