Amy Jackson: இரண்டாவது முறை தாயான எமி ஜாக்சன்.. குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: மதராசபட்டினம், தெறி, எந்திரன், தங்கமகன் என அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன். கடந்த ஆண்டு காதலர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொண்டர். இதைத்தொடர்ந்து,கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து இருந்த நிலையில், தற்போது எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.எல் விஜய் இயக்கிய 2 மதராசபட்டினம் படத்தில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி ஜாக்சன், அந்த படத்தில் இங்கிலாந்து பெண் போல, அந்த ரோலுக்கு ஏற்றபடி எமி இருந்ததால், அந்த படத்தில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அழகாக க்யூட்டாக இருந்த எமி ஜாக்சன் '' மறந்துட்டியா '' என கொஞ்சும் தமிழில் கேட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, விக்ரமுடன் ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி, எந்திரன், என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அண்மையில் எமி ஜாக்சன் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் செய்யாமல் கர்ப்பமானார்: நடிகை எமி ஜாக்சன், தனது காதலர் ஜார்ஜூடன் பல ஆண்டுகள் உறவில் இருந்தார். இதனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண் குழந்தைக்கு தாயான எமி, குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர். ஆனால், அதற்கு முன்பே, எமி ஜாக்சனுக்கும் அவரது காதலர் ஜார்ஜூக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதன் பின், இன்ஸ்டாகிராமில் இருந்து காதலர் ஜார்ஜின் போட்டோவை டெலிட் செய்துவிட்டு, ஜார்ஜை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
இரண்டாவது முறை கர்ப்பம்: காதலரை பிரிந்து தனியாக வசித்து வந்த எமி ஜாக்சன், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளான டேட்டிங்,பார்ட்டி, திரைப்பட விழா என இருவரும் பல இடத்தில் சுற்றித்திருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. தனது முதல் காதலனுக்கு பிறந்த மகனுக்கு முன் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

குழந்தை பிறந்தது: இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் நடிகை எமி ஜாக்சன், தனது காதலர் நடிகர் எட் வெஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நண்பர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, திருமணமான இரண்டே மாதத்தில் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதை சுட்டிக்காட்டி இணையவாசிகள் கேலி செய்தாலும்,
இரண்டாவது முறையாக கர்ப்பமான எமி ஜாக்சனுக்கு பலரும் வாழ்ந்துக்களை தெரிவித்து வந்தனர்.
பெயர் என்ன தெரியுமா?: இந்நிலையில், எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். எமி மற்றும் அவரது கணவர் எட் வெஸ்ட்விக் இருவரும் குழந்தைக்கு நேற்றியில் முத்தம் கொடுத்து குழந்தையை வரவேற்றுள்ளனர். மேலும் எமி ஜாக்சன் தனது மகனுக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் வைத்துள்ளார். இந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் பலரும் எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











