ரொம்ப மோசமா போகுது.. மகனுடன் படுக்கையில் நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை: நடிகை எமி ஜாக்சன் தனது பிறந்தநாளை பிறந்தமேனியாக கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்திருகும்போதே கணவர் கேக்குடன் வர ஆடையணியாமல் அப்படியே கேக் வெட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கூடவே அவருடைய 4 வயது மகன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர்.
தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான எமி ஜாக்சன் கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளியான மிஷன் சாப்டர் 1 படம் வரை நடித்துள்ளார்.

ஏற்கனவே தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு என்பவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பார்ட்னருடன் பிரேக்கப்: எமி ஜாக்சனை ராணி போல ஜார்ஜ் பன்னாயுட்டு பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை வெடித்தது என தெரியவில்லை. ஆண் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு எமி ஜாக்சனை விட்டுச் சென்றுவிட்டார் ஜார்ஜ் பன்னாயுட்டு. மீண்டும் எமி ஜாக்சன் நடிக்க வந்ததும் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் ஏற்பட்ட காதல் தான் முதல் பார்ட்னரை அவர் பிரிய காரணம் என கிசுகிசுக்கள் கிளம்பின.

மகன் முன்னிலையில் திருமணம்: பார்ட்னரை பிரேக்கப் செய்து பிரிந்த எமி ஜாக்சன் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் டேட்டிங் செய்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு வந்தார். மேலும், இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அந்த திருமணத்தில் எமி ஜாக்சனின் மகன் ஆண்ட்ரியாஸ் அம்மா மற்றும் புது அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.
பிறந்தமேனியாக பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகை எமி ஜாக்சன் கடந்த ஜனவரி 31ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழில் மதராசப்பட்டினம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0 மற்றும் மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தனது 33வது பிறந்தநாளை ஆடையே அணியாமல் பிறந்தமேனியாக அவர் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

மகனுடன் நிர்வாண கோலத்தில்: இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன் தனது 4 வயது மகனுடன் நிர்வாண கோலத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடலாமா என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். பொதுவெளியிலேயே நிர்வாண புகைப்படங்களை பதிவிடும் நடிகைக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











