இங்க கொரோனா பீதி.. அங்க கேப்ரி தீவில் பிரபல நடிகை ஜாலி ரவுண்ட்.. பிகினி ஸ்டில் வெளியிட்டு ஜில்!

By

சென்னை: இத்தாலிக்குச் சுற்றுலா சென்றுள்ள பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன்.

விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாகவே அவர் நடித்திருந்தார்.

காதல், கர்ப்பம்

காதல், கர்ப்பம்

இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதையடுத்து விக்ரமின் தாண்டவம், தனுஷின் தங்கமகன், விக்ரமின் ஐ, விஜய்யின் தெறி உட்பட சில படங்களில் நடித்தார். ஆங்கில படத்திலும் நடித்து வந்தார். தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்த எமி ஜாக்சன், தமிழில் கடைசியாக, ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்திருந்தார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். பின்னர் கர்ப்பிணியாக இருந்த எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுக்கும் லண்டனில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இத்தாலி சுற்றுலா

இத்தாலி சுற்றுலா

இந்த திருமண நிச்சயதார்த்த வீடியோ, வைரலாயின. இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தி அந்தப் புகைப்படங்களையும் அடிக்கடி வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எமி ஜாக்சன். இந்நிலையில் இப்போது அவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதயத்தின் ஒரு பகுதி

இதயத்தின் ஒரு பகுதி

அங்குள்ள கேப்ரி தீவுக்கு சென்றுள்ள எமி ஜாக்சன், பிகினி உடையுடன் சில ஜில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதற்கு கேப்ஷனாக, என் இதயத்தின் ஒரு பகுதி இங்கே இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்தப் போட்டோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷோபி சவுத்ரி உட்பட நூற்றுக்கணக்கான நெட்டிசன்ஸ் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

ஃபிட்டா வச்சிருக்கீங்களே

ஃபிட்டா வச்சிருக்கீங்களே

ஒருவர், அது சூப்பர் இடமாச்சே, வெளிய வர மனசே வராது என்று கூறியுள்ளார். மற்றொருவர், போன வருஷம் அங்க போயிருந்தேன் என்று கூறியிருக்கிறார். பலர் அவர் அழகை ஸ்டன்னிங் என்று கூறியுள்ளனர். குழந்தை பிறந்த பிறகும் உடலை இன்னும் ஃபிட்டா வச்சிருக்கீங்களே என்று சிலர் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டுல இருந்து மில்லியன் கணக்கில் இதயங்களை திருடியவர் எமி என்று சிலர் கூறியுள்ளனர்.

அக்கறையான ரசிகர்

அக்கறையான ரசிகர்

நீங்க வேற லெவல் அழகி எமி என்று புகழ்ந்துள்ளார். கொரோனா? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளார் இன்னொருவர். இப்படி சுத்தறீங்களே, அங்கலாம் கொரோனா நோய் தொற்று இல்லையா? என்று கேட்டிருக்கிறார், அக்கறையான ரசிகர். சீக்கிரமா இந்தியா வந்து படங்கள்ல நடிங்க, வெயிட்டிங் என்று கூறியுள்ளார் ஒரு நெட்டிசன். எமி ஜாக்சனின் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X