»   »  வெளிநாட்டில் இருந்து அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் போட்ட எமி ஜாக்சன்

வெளிநாட்டில் இருந்து அரை நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் போட்ட எமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படபுரமோசனுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் படக்குழுவினரை ஏமாற்றி விட்டு வெளிநாடு பறந்த எமி ஜாக்சன்

தனது அரை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் ஃபிரீக்கி அலி என்ற படத்தில் நவாசுதின் சித்திக் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிவி புரமோஷனில் ஏமி ஜாக்சன் கலந்து கொள்ளாதது, படக்குழுவினரை ஆத்திரப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் நடித்து இருக்கும் ஏமி ஜாக்சன் குறித்து எந்த தகவலும் இல்லாததால், படக்குழுவினர் கோபம் அடைந்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Bliss 💫

A photo posted by Amy Jackson (@iamamyjackson) on Aug 25, 2016 at 4:37am PDT

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிய வேண்டியது இருப்பதால், அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இதற்கிடையே அவருக்கு இந்தி மொழி அதிகம் பேச வராது என்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பட புரொமோஷனின்போது அவர் இங்கு இல்லை என்று இந்தப் படத்திற்கான செய்தி தொடர்பாளர் கூறி வந்த நிலையில் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, வெளிநாட்டில் உல்லாசமாக சுற்றி, தனது புகைப்படங்களை கூலாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் ஏமி ஜாக்சன்

அதுவும் அரை நிர்வாணத்தில் ஆடைகளற்ற உடலோடு எமி ஜாக்சன் கொடுத்துள்ள போஸ் பெரிய புரமோசனாக இருக்கிறதேப்பா என்கின்றனர் படக்குழுவினர்.

English summary
Actress Amy Jackson has posted some very hoot pics on her Instagram account. These pics are really unseen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil