ஏமி ஜாக்சன் திருமணம் எங்கு, எப்பொழுது நடக்கிறது தெரியுமா?

By Siva

Recommended Video

நடிகை ஏமி ஜாக்சன் பிரம்மாண்டமான திருமத்திற்கு தயார்- வீடியோ

லண்டன்: நடிகை ஏமி ஜாக்சன் எங்கு, எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசபட்டினம் படம் மூலம் நடிகையானவர் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். அவருக்கும், காதலரான ஜார்ஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களின் திருமணம் நடக்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சனுக்கும், ஜார்ஜுக்கும் 2020ம் ஆண்டின் துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளது. அவர்கள் இங்கிலாந்தில் அல்ல மாறாக கிரீஸில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த இடத்தை தேர்வு செய்தது ஏமியாம்.

 ஜார்ஜ்

ஜார்ஜ்

திருமணத்திற்கு பல இடங்களை பார்த்துள்ளார்கள். ஆனால் கடற்கரையோரம் திருமணம் செய்ய வேண்டும் என்று ஏமி விரும்பினாராம். இதையடுத்து தான் கிரீஸை தேர்வு செய்துள்ளார்கள். மைகொனோஸ் தீவுக்கு அருகில் உள்ள வில்லாக்களில் ஒன்றில் அவர்களின் திருமணம் நடக்கக்கூடும்.

 வருங்கால கணவர்

வருங்கால கணவர்

ஏமி கடந்த ஆண்டு ஜார்ஜுனுடன் கிரீஸுக்கு சென்றபோது அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம். ஏமிக்கு பிடித்த இடத்திலேயே திருமண விழாவை நடத்த முடிவு செய்துள்ளாராம் ஜார்ஜ். அவர்கள் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 புத்தாண்டு

புத்தாண்டு

திருமணத்திற்கு பிறகு இங்கிலாந்தில் செட்டில் ஆகிறாராம் ஏமி. புத்தாண்டு அன்று தான் ஏமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X