twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா வைரஸ் பரவ இது தான் காரணம்.. நடிகை எமி ஜாக்சன் காட்டம்.. விவாத பொருளாக மாறிய ட்வீட்!

    |

    சென்னை: இறைச்சி கடைகளால் தான் கொரோனா உள்ளிட்ட வைரஸ்கள் உலகளவில் அதிகமாக பரவுகிறது என நடிகை எமி ஜாக்சன் காட்டமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

    இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன், மதராசபட்டினம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார்.

    குழந்தை பெற்ற நிலையில், தற்போது தனது காதலன் மற்றும் குழந்தையுடன் இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார்.

    'நல்லாருக்கே.. இப்படித்தான் டிரெஸ் போடுவீங்களாக்கும்..?' கிளாமர் ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!'நல்லாருக்கே.. இப்படித்தான் டிரெஸ் போடுவீங்களாக்கும்..?' கிளாமர் ஹீரோயினை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

    ஆன்லைனில் ஆக்டிவ்

    ஆன்லைனில் ஆக்டிவ்

    ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், குழந்தை பிறந்த முதலே சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன். பிகினியுடன் இருக்கும் புகைப்படங்களையும், குழந்தையை கொஞ்சும் போட்டோக்களையும், காதலனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

    பீட்டா தூதர்

    பீட்டா தூதர்

    மிருகங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருக்கும் பீட்டா அமைப்பின் தூதுவராக இருந்து வரும் நடிகை எமி ஜாக்சன், அசைவ உணவுகள் மற்றும் தோல் பொருட்களை பயன்படுத்தவும் தவிருங்கள் என பல முறை தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவுறுத்தி வருகிறார். அவரது பதிவுகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

    கொரோனா பரவ காரணம்

    கொரோனா பரவ காரணம்

    இந்நிலையில், தற்போது நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட், சர்வதேச அளவில் நடைபெற்று வரும் விவாதத்தை மையப்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வர இறைச்சி கடைகள், இறைச்சிகளை விற்கும் மார்க்கெட் உள்ளிட்டவை தான் காரணம் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் இறைச்சி கூடங்களில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், எமி இப்படி ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.

    வூஹான் சந்தை

    வூஹான் சந்தை

    கொரோனா வைரஸ் உருவனதாக கருதப்படுவதே சீனாவில் இருக்கும் வூஹான் சந்தை தான். நாய்க் கறி, வவ்வால் என சகல ஜீவராசிகளையும் இறைச்சிகளாக மாற்றி விற்பனை செய்து வருவதால் தான் புதுப்புது வைரஸ் கிருமிகள் உருவாகி பரவி வருவதாகவும் நடிகை எமி ஜாக்சன் தனது பதிவில் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    வைரல் போட்டோ

    வைரல் போட்டோ

    சமீபத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை எமி ஜாக்சன், வெட்ட வெளியில் வானத்தை பார்த்து நின்றபடி செம ஃபிட்டான ஜிம் உடையில் கொடுத்த ஆலோ யோகா போஸ் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின. இந்நிலையில், தற்போது இறைச்சி கடைகளுக்கு எதிராக எமி போட்டிருக்கும் ட்வீட் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

    English summary
    As an increasing number of workers at slaughterhouses across the world test positive for Covid-19, Amy Jackson lashed out at slaughterhouses and called them breeding ground for diseases.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X