அல்ட்ரா பியூராம்.. புது சரக்கை விளம்பரப்படுத்தும் எமி ஜாக்சன்.. அதுவும் எந்த டிரெஸ்லன்னு பாருங்க!

சென்னை: என்னடா வளைச்சு வளைச்சு கிளாமரா போஸ் கொடுக்கிறாரேன்னு பார்த்தா, சத்தமே இல்லாம, புது விளம்பரம் ஒன்றை பிடித்து விட்டார் எமி ஜாக்சன்.

அதுவும் என்ன விளம்பரம் தெரியுமா? ஆல்கஹால் விளம்பரம். பிகினி உடையில் புது சரக்கை அருந்தியபடி செம கவர்ச்சியாக அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

கூடவே ஹாலிடேவையும் என்ஜாய் பண்ண ஆரம்பித்து விட்டார் இந்த 'ஐ' பட நாயகி.

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன், மதராசபட்டினம் படத்திற்காக சென்னை வந்தார். 2.0 படம் வரை நடித்து முடித்த அவர், மீண்டும் தற்போது இங்கிலாந்திலேயே தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தைக்கு விரைவில் ஒரு வயது ஆகவுள்ள நிலையில், தனது அடுத்த கட்ட முயற்சிகளுக்கு அடியெடுத்து வருகிறார் எமி ஜாக்சன்.

80 வயசானாலும்

80 வயசானாலும்

சமீபத்தில் ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகை எமி ஜாக்சன், சினிமாவில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். நான் ஒரு நடிகை. இப்போ இல்ல எனக்கு 80 வயசானாலும் நடிப்பேன். என அந்த பேட்டியில் எமி ஜாக்சன் கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

9 மில்லியன் ரசிகர்கள்

9 மில்லியன் ரசிகர்கள்

மதராசபட்டினம், தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ, 2.0 என ஏகப்பட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமான எமி ஜாக்சன், சூப்பர் கேர்ள் எனும் ஹாலிவுட் வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். இன்ஸ்டாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவருக்கு கிட்டத்தட்ட 9 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புது சரக்கு

புது சரக்கு

தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வந்த நடிகை எமி ஜாக்சன், தற்போது SERVED எனும் புதுவித ஆல்கஹால் விளம்பரத்தில் போஸ் கொடுத்துள்ளார். மோனோகினி உடை அணிந்த படி செம செக்ஸியாக அந்த ஆல்கஹாலை அருந்தும் அவர், இது அல்ட்ரா பியூர் என்றும் கேப்ஷன் கொடுத்து விளம்பரப்படுத்தி வருகிறார்.

இத்தாலியில் சுற்றுலா

இத்தாலியில் சுற்றுலா

இங்கிலாந்தில் லாக்டவுனில் இருந்து வந்த நடிகை எமி ஜாக்சன், லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்டுள்ள நிலையில், இத்தாலியின் கேப்ரி நகரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு புலி நிற டிசைனில் உள்ள உள்ளாடைகளை அணிந்த படி செம செக்ஸியாக எமி ஜாக்சன் கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X