கர்ப்பமாக இருக்கிறேன்: காதலருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட ஏமி ஜாக்சன்
Recommended Video

சென்னை: நடிகை ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் ப்ரொபோஸ் செய்ததாக ஏமி தெரிவித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏமி
ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது.

பிரபலங்கள்
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜம். இந்நிலையில் ஏமியின் அறிவிப்பை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொழில் அதிபர்
ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ. 3 ஆயிரத்து 600 கோடி ஆகும். ஜார்ஜ் எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகம்
ஏமி ஜாக்சனுக்கு திருமணம் என்றதுமே அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் தாயாகப் போவதால் கண்டிப்பாக சில காலத்திற்கு நடிக்க மாட்டார் என்று ரசிகர்களே முடிவு செய்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications