'டாப்லெஸ்'ஸா போஸ் குடுத்து கோர்ட் பிரச்சனையை இழுக்கும் எமி ஜாக்சன்!
சென்னை: பிரிட்டன்ல பொறந்து, தமிழ்நாட்டுல நடிக்க வந்த இந்த எமி ஜாக்சன் பொண்ணு அட்டகாசம் தாங்க முடியலைங்கோவ்!
டாப்லெஸ்ஸா போஸ் குடுத்து, செய்தி பத்திரிக்கைகளில் டாப் இடத்தை பிடிச்சுருக்கு இந்தப் பொண்ணு.
பாஸ் மாடல் மேனேஜ்மெண்ட் அப்படிங்கற லண்டன் கம்பெனிக்குதான் பொண்ணு இப்படி போட்டோ ஷூட்க்கு அரைகுறையா போஸ் குடுத்துருக்கு.

"ஐ" யில ஹீரோயின்:
ரொம்ப அழகான பொண்ணான எமி இயக்குனர் ஷங்கரோட "ஐ" படத்துல விக்ரமோட சேர்ந்து ஹீரோயினா நடிச்சு வருது.

மேக்-அப்லாம் வேறயாம்:
இந்த போட்டோக்கு மேக்-அப் சுசி கிளார்கி, சிகை அலங்காரம் பேட்ரிக் செய்துருக்காங்கலாம். 22 வயசு பொண்ணான எமி, இப்படி போஸ் குடுக்கறது மொத தடவை இல்லை அப்படிங்கறதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

தமிழ்நாட்டில் காத்திருக்கு சர்ச்சை:
ஆனா, எமியோட இந்த முடிவு தமிழ்நாட்டில் அவருக்கு எதிரா பெரிய பிரளயத்தை கிளப்பவும் சான்ஸ் இருக்கு.

இயக்குனர் விஜயின் ஹீரோயின்:
இயக்குனர் விஜய்யோட "மதராசபட்டினம்" படத்தில நடிச்ச எமி, அவரோட இன்னொரு படமான "தாண்டவம்"லையும் நடிச்சுது.

மாட்டிக்கிட்டு முழிக்காதமா:
தமிழ்ல மூணாவதா எமி நடிக்கற "ஐ" படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பிடிச்சுதரும் அப்படினு தமிழ் சினிமா உலகத்துல பேசிக்கறாங்க. அதுக்குள்ள இந்த பொண்ணு எந்த வீண்வம்புலையும் மாட்டிக்காம இருந்தா சரிதான்.

கோர்ட்டு ரெடி, கேஸும் ரெடி:
இப்ப மேட்டர் என்னான்னா,, இப்படி கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பதை எதிர்த்து நம்மாளுங்க யாராவது கோர்ட்டுக்குப் போய்ட்டா என்ன பண்றதுன்னுதானாம்!


Click it and Unblock the Notifications











